சமத்துவம்
சமத்துவம் என்றால் என்ன? சமத்துவம் நீதியினைக் குறிக்கும் எவ்வாறான பின்னணியினைச் சேர்ந்த பிள்ளைகளாயிருப்பினும் அதாவது உள்ளவர், இல்லாதோர், ஆண், பெண் நகரவாசி அல்லது கிராமவாசியாயிருந்தாலும் கல்வியில் உரிமை பெறுவதனையே சமத்துவம் குறிக்கின்றது. ஐக்கிய இராச்சியத்தில் கல்வி முறையினை முன் ஒரு பகுதியில் ஆராயும் பொழுது சமத்துவம் சம்பந்தமான பிரச்சினைகளைக் குறிப்பிட்டுள்ளோம். சமத்துவத்தினை சமூகவகுப்பு இனம் அல்லது. இருப்பிடவாரியாக நோக்ககூடியதாக இருப்பினும், பிரித்தானியக் கல்வியில் சமூகவகுப்பு என்ற அடிப்படையில் இதனை நோக்குவோம்.
சிய சமூக வருப்புக்கள் மட்டும். ஏனையவற்றிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான காரணங்களைப் பல ஆய்வாளர்கள் விளக்க முயன்றுள்ளனர். கல்வி அடைவில் வகுப்பு:மார் வேறுபாடுகளை மசிரீபிட்(Halcey,Heath.pidge)என்பவர்கள் 1980ஆம் ஆண்டில் தமது ஆய்வில் காட்டியுள்ளனர். தொழிலாளர் வகுப்பினைச் சேர்ந்த சிறுவன் ஒருவனிலும் பார்க்க. சேவையைச் சேரந்த (விற்பனையாளர்) சிறுவன் ஒருவன் தனது 16ம் வயதில் பாடசாலையில் தங்கியிருப்பதற்கு 4 மடங்கு மேலதிக வாய்ப்புக்களையும், 17 வயதில் 8 மடங்கு மேலதிக வாய்ப்புக்களையும் 11 வயதில் 10 மடங்கு மேலதிக வாய்ப்புக்களையும் பெற்றிருக்க இவ்வாய்வாளர் கண்டனர். அத்துடன் பல்கலைக்கழகம் செல்வதற்கு 11மடங்கு மேலதிக வாய்ப்புக்களைப் பெற்றுள்ளான் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
1985ம் ஆண்டிற்கான வீடுவாரியான பொது ஆய்வு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்க
தந்தையின் சமூகப் பொருளாதார அடிப்படையில் பால்வாரியாகப் பெறப்பட்ட மிக உயரிய மட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகளும் தொழில் தகைமையாளர்களுடைய பிள்ளைகள் பெற்ற நாற்றுவீ அடைவிளை, உடல் உழைப்பாளரது பிள்ளைகளின் அடைவுடன் ஒப்பிடுக. நுகர்வோர் கல்வி மட்டத்திலும் ஒரே மாதிரியான அடைவு வேறுபாட்டினைக் காண்கிறீர்களா? ஒப்பீட்டு ரீதியில் நோக்குகையில் தொழிலாளர்களின் சித்தியடையாமைக்குரிய காரணங்கள் யாவை? பிள்ளைகள் முதற்கூறிய காரணம் பாடசாலை அமைப்பில் உள்ள சமத்துவமின்மையாரும், இதனை நாம் முன்பு கலனித்துள்ளோம் மேல் குறிப்பிட்டது போன்ற ஆய்வுகளை நேர்க்கும் போது. சிறுவர்களின் அடைவில் சமூக வகுப்பு செலுத்தும் செல்வாக்கினைக் குறைப்பதற்கு, இங்கிலாந்து பல முயற்சிகளைக் கையாண்டது. தெரிகிறது. முதற்படியாக ஒருங்கிணைந்த பாடசாலை அமைப்பு நிறுவப்பட்டமையினை நாம் கவனித்தோம். அடுத்தபடி ஈடுசெய்யும் கல்வியாகும் தொழிலாளர் வகுப்பினர் வாழும் பிரதேசங்களில் சிலவற்றை இங்கிலாந்து 1960ஆம் ஆண்டில் கல்வியில் முதன்மை பெறும் பிரதேசங்கள் (Education Priority Areas EPA) என வகுத்தது. குறைவான வருமானமுள்ள பிரதேசங்களின் பாடசாலைச் சபைகளுக்கு மேலதிக வளங்களைக் கொடுத்துதவலாயிற்ற அப்பிரதேச ஆசிரியர்களது சேலையினை நிறைவுபடுத்தும் வகையில் அவர்களுக்கு சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன. ஈடுசெய்யும் கல்வித்திட்டங்கள் முன் பள்ளித்துறைக்கும். பாடசாலைகளின் படிப்பறிவு மட்டத்தை சீர் திருத்துவதற்கும் வருக்கப்பட்டடை இல் மேலதிச் முயற்ரிகளின் பலாபலன்கள் திருப்திகரமானதாக அமையவில்லை. இதற்குக் காரணம் நிதி வாநீர் குறைவெனக் குற்றம் சாட்டப்பட்டது.
கல்வியின் சமத்துவமின்மையினை நீக்குவதற்குச் சமீப காலத்தில் கையாண்ட உபாயம் தேசிய பாடஏற்பாடாகும். (National Curriculam). 1988ஆம் ஆண்டுக கல்விச் சட்டம் தேசிய பாடஏற்பாட்டினை வகுத்தது. ஆங்கிலம்.கணிதம், விஞ்ஞானமாகிய மூன்றும் மையப்பாடங்களாக அமைந்தன. இவற்றுடன் ஏழு அடிப்படைப் பாடங்களும் இடம் பெற்றன. அவை வரலாறு, புவியியல், அன்னியமொழி, சித்திரம், சங்கீதம்,உடற்கல்வியும் தொழில் நுட்பமாகும். 1944ஆம் ஆண்டுக் கல்விச் சட்டம் அமுலாக்கிய சமயக் கல்வியும் இதனுடன் சேர்க்கப்பட்டது. வேல்ஸ்சு நாட்டில் வேல்ஸ்மொழி (Welsh) மையப்பாடங்களில் ஒன்றாக இயங்கியது. இளைஞர்களுக்கு வாக்கத்தினை அளிப்பதும், பொருத்தப்பாட்டைவதுமான சிலபாடங்கள் தேசிய பாடஏற்பாட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன என 1994 ஆம் ஆண்டின் டியறிங் அறிக்கை (Dearing Report) கூறுகிறது. சமத்துவத்தினை மதிப்பிடுவது தொடர்பாகவும் நோக்க முடியும். வெவ்வேறு பின்னணியினைச் சார்ந்த பிள்ளைகள் ஒரே பரீட்சைக்குத் தோன்றும் போது அவர்களுடைய செயற்பாடானது வேறுபடுகின்றது என்பதை நாம் முன்னமே கருத்திற் கொண்டோம். 1961ஆம் ஆண்டு வரையும் பிள்ளைகள் 16 வயதில் க.பொ.த.சாதாரணம் (G.CE OL பரீட்சைக்குத் தோன்ற நேரிட்டது. இப் ஸ்ரீட்சையே பிள்ளைகளை அடுத்த கல்வி மட்ட நிலைக்கு ஆயத்தமாக்குவதாக அமைகின்றது. 1964ஆம் ஆண்டில் இடைநிலை கல்விச் சான்றிதழ் (CSE) பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. இது க.பொ.த (சாதாரண நரம்)பரீட்சையில் தேறத் தகுதியுடைய முதல் 20% விகிதத்தினருக்கு அடுத்துள்ள 40%விகிதத்தினரின் தரத்திற்கேற்றதாக உருவாக்கப்பட்டது இப்பரிட்சைப் பாடங்களின் பாடத்திட்டங்கள் அங்கீகாரம் பெற்ற எல்லையுடையனவாகக் காணப்பட்ட போதிலும் மானிடவியல் அவ்வாறாக அமையவில்லை. இவ்விரு பரீட்சைகளும் வெவ்வேறான பாதைகளில் பிள்ளைகளை திசைப்படுத்துவதாகவும், அத்துடன் மீண்டும் தொடர்புள்ள கல்வி, பயிற்சிநெறிகள், தொழில் என்பவற்றிற்குச் செல்வாக்குச் செலுத்துவனவாகவும் காணப்பட்டன. மேலும் இவ்வாறான பிரிவு இரு வகையான கல்வி அனுபவங்களுடன் தொடர்புடையனவாகவும் காணப்பட்டன. அதாவது “லிபரல்” கல்வியும் பொருத்தப்பாடுடைய கல்வியுமாகும். இதில்
அடுத்து சு.பொ.த.(G.C.E. O.L)பரீட்சைக்கும் இடைநிலைக் கல்விப்பத்திரப்(C.S.E) பரீட்சைக்கும் பதிலாக இடைநிலைக் கல்விப்பொது தராதரப்பத்திரம் (GCSE) பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. இதனால் ஒரே பாடசாலையிலுள்ள மாணவர்கள் வெவ்வேறு பரிட்சைகளுக்குத் தோற்றுவது தவிர்க்கப்பட்டது. அத்துடன் பாடப் பொருளாக்கத்தில் “லிபரல் கல்வியும்” பொருத்தப்பாடான கல்வியும் சேர்க்கப்பட்டன. மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது பாடச் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டன. பிரமாண விதிப்படி தரம் அளவிடப்பட்டதுடன், முழு ஆற்றல் பரப்பிற்கும் மதிப்புக் கொடுக்கப்பட்டது. தரம் சம்பந்தமான பிரச்சினைகள் என்ற பகுதியில் மதிப்பீட்டினை மீண்டும் ஆராய்வோம்.
சமந்துவத்தினை நிலை நாட்டும் முயற்சிகளில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் 1990ஆம் ஆண்டில் தோன்றிற்று. இக்காலப் பகுதியில், அரசிற்கும், உள்ளூர் கல்வி அதிகாரிகளுக்கும், கல்வியை வளர்க்கும் வேறு அமைப்புக்களுக்குமிருந்த கூட்டுப்பங்களிப்பில் மாற்றம் ஏற்பட்டது. 1988,1992,1993ஆம் ஆண்டுகளில் தோன்றிய கல்விச் சட்டங்கள். உள்ளூர் கல்லி அதிகாரிகளுக்கிருந்து வந்த நிதிஉபயோகம், ஆசிரியர் நியமளம் மாணவ அனுமதி என்பன. பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கம் ஒப்படைக்கப்பட்டன. இதன் விளைவாகக் கல்வி நிறுவனங்களுக்கான போட்டி அதிகரித்தது. அத்துடன் தட்டுப்பாடான வளங்களை முறையாக வழங்கும் ஒழுங்கு முறையும் நிலைகுலைந்தது. அத்துடன் கல்வி தனியார் மயப்படுத்தப்பட பொது மக்கள் தனியார் வசதியினைப் பயன்படுத்தி தனியார் கல்வியில் தங்கத் தொடங்கினர். இந் நிறுவனங்கள் பெற்றோர் நன்கொடைகள், புத்தகங்கள், உபகரணங்கள், போன்ற அத்தியாவசியப் பொருட்களி, ஆசிரியர், தொழில் ஸ்தாபன விளம்பரங்களில் தங்கியிருந்தன அந்துடன் சேவைகளும் இவற்றிற்கு விற்கப்பட்டடை அதாலது விளையாட்டு மைதானங்கள், வசதிகள் உபகரணங்கள் என்பன வாடகைக்கு கொடுக்கப்பட்டன. என் பிறிங் என்பாரின் ஆய்வு (Pring 1995) தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தனியார் துறைக்கு ஆதரவாக வழங்கப்பட்ட உதல் நிதிகளும் இவ்வமைப்புக்களுக்கு உற்சாகம் ஊட்டின. இவ்வாறான வேறுபட்ட பொறுப்பாளர்களும், நிதி உதவிகளும் சுதந்திரப் போக்கும். பல தரப்பட்ட பிரிவுகளைக் கொண்ட கல்வி அமைப்புக்களை உருவாக்கின. இவ்வாறான போக்கு சமத்துவத்தைக் கருத்திற் கொள்வதாக இல்லை
தற்போது இலங்கையின் கல்வி நிலமையினை உற்று நோக்கவும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்குமிடையில் ஒத்த தன்மைகளைக் காண்கிறீரா? வேறுபட்ட பிள்ளணிகளும் பொருளாதார அபிவிருத்தியும் காணப்படும் இவ்விரு நாடுகளில் கல்வி சம்பந்தமாகத் தோன்றும் ஒரே தன்மையான நிலமைகளை எவ்வாறு நோக்குவீர்? கல்வியின் பணியினை, இலங்கை எதிர்நோக்கும் ஓர் பிரச்சினை எனக் கருதப்படுவது உயது நினைவிலிருக்கும். ஐக்கிய இராச்சியத்திலும் சமீப காலத்தில் கல்வியின் பண்பு பற்றிய அக்கறை எழுந்துள்ளது.
இலக்கணப் பாடசாலைகளை நீக்கியதனாலும், முற்போக்கு அணுகுமுறைகள் கற்பித்தலில் சேரக்கப்பட்டதனாலும் கல்வித்தரம் குறைந்துள்ளதெனக் கருதும் பத்திரிகைகள் கண்டித்துள்ளன. (Black Papers) கொக்ஸ்கம் டைபனும் (196) b) கொக்ஸ்கம் பொய்கனும் (1977) யோன் யுபி (dolin Deudey) போன்ற கலவியலாளர்கள் ஆதரித்த கல்வி அணுகுமுறையே முற்போக்கு முறையாகும். சிறுவர்கள் கல்வியில் ஊக்கமுடன் செயற்படும் போது கல்வி மகிழ்ச்சியுடையதாக அமையும் என இவர்கள் கூறினர்.படிப்பறிவும் எண்ணறிவும் சம்பந்தமான நிலை பற்றிய கவலைகளை, வளர்ந்தோர் படிப்பறிவும் அடிப்படைத் திறள்களும் என்ற கல்வி அலகானது (ALBSC) 1993ஆம் ஆண்டில் பிஸ்வருமாறு கூறியது.
21 வயதுடைய ஒரு பிரதிநிதித்துவக் குழுவின் அடையினை நோக்கிய ஒரு முக்கிய ஆய்வானது சுமார் 15 வீதத்தினருக்கே ஓரளவு படிப்பறிவு காணப்பட்டது என்றும் 20 வீதத்தினரிடையே அடிப்படைக் கணித அறிவு மிகக்குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கிறது. தொடரும் கல்விக் கல்லூரியில் 10,000 மாணவர்களை உட்படுத்திய ஆய்வானது NVQ மட்டம் இரண்டில் தகைமை பெறுவதற்கு ஒவ்வொரு 10 மாணவர்களுள் 4பேர் அடிப்படைத்திறன்களைப் பெறுவதற்கு மேலதிக உதவியினைப் பெறவேண்டியவர்களாகக் காணப்பட்டனர்.
கல்வி அடைவுகள் தொடர்பான சர்வதேச ஒப்பீடுகள் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. பிரயிசும் வேக்னரும் (Prais & Wagner 1983) கீழ் இடைநிலை மாணவர்களின் அடைவினை ஆராய்ந்தனர். ஜேர்மன் மாணவர்களிகளின் அடைவானது இங்கிலாந்து மாணவர்களினது அடைவிலும்பார்க்க உயர்ந்து காணப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். பொஸ்ட்லெத்லெயிற் (Postlethwait 1988) இங்கிலாந்தில் 14 வயதானோர் பெற்ற புள்ளிகளை அதே வயதான 17 நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவின் அடிப்படைக் கணிதத் திறனைப் பொறுத்த மட்டில் போலின் (Ball 1990)ஆய்வானது, பிரித்தானியர், ஜப்பானியப் பிள்ளைகளிலும்பார்க்க இரு ஆண்டுகள் பிள் தங்கியுள்ளதான நிலமையினைக் காட்டுகின்றது. 1993ஆம் ஆண்டில் பிரித்தானியப் பொறியியல் சபையானது 27வீத மாணவர்கள் மட்டுமே (GCSE) இடைநிலைக் கல்விப் பொதுத்தராதரப்பத்திரத்தில் மையப்பாடங்களான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் என்பவற்றில் A- C தரங்களைப் பெற்றுள்ளனர் எனக் கூறுகின்றது. அதற்குச் சமமான பரீட்சையில் பிரான்சின் எ% எனவும் ஜேர்மனியில் 62% எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று கணிதம், தேசியமொழி. விஞ்ஞானப் பாடங்களின் அடைவுகள் ஒப்பிடப்பட்டு, உயர் இடைநிலைக் கல்வித் தகைமைகள் பெறுபவர்களின் நூற்று கணிக்கப்பட்டது. இது அட்டவணை 4,3&44 இல் கொடுக்கப்பட்டுள்ளது.