வரலாற்றுக் காரணிகளினால் தொடரும் செல்வாக்கு
அட்வணை 01 இல் பெயரிடப்பட்ட இனக்குழுக்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு எவ்வாறு வந்து குடியேறினர் என்பதை நீங்கள் அறிவீர்களா? இவற்றுள் பெருபான்மையினரான வெள்ளையர் குழுவே அதிகாரம் உள்ள குழுவாகும். நீண்டகாலமாகத் தாழ்நிப்பட்டிருந்தவர்கள் என்பதனால் இன்று அரசியற் துறையில், காட்சியளித்து முக்கியத்துவம் பெறுகின்றவர். கால ஓட்டத்தில் அவர்களது நிலை எவ்வாறு மாற்றமடைந்ததென்பதை ஆராய்வோம்.
இவர்களது முதாதையர் அடிமைகளாக ஐக்கிய அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட காரணத்தினால் 1961 ஆம் ஆண்டிற்கு முன்னர். இவர்கள் பிரித்து ஒதுக்கப்பட்டோராக இருந்தனர். தென் ஆபிரிக்க நீக்ரோக்களின் நிலையிலேயே இவர்களும் காணப்பட்டனர். கல்வி, வீடமைப்பு, தொழில் மற்றும் பொது இடங்களில் நீகிரோக்களுக்கு வேற்றுமை காட்டுதல் சட்டவிரோதமானதென 1964 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டமானது விதித்தது. ஐக்கிய அமெரிக்க நீகிரோக்களுக்குச் சமூகப்பொருளாதாரத் துறைகளிற் காணப்பட்ட நிலையே கல்வியிலும் பிரதிபலித்தது. அவர்கள் அடிமைகளாக வாழ்ந்த காலப்பகுதிகளில் கல்வியில் சமவாய்ப்பு என்ற எண்ணக்கரு அர்த்தமற்றதாகக் காணப்பட்டது பிளசேக்கும் (Plassey) (Farguson) இடையிலான வழக்கில் வெள்ளையர்களுக்கு சா வசதிகளையுடைய வேறு பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 1896இல் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு 1900 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில், நிலவிய சிந்தனையை எடுத்துக் காட்டுக்கின்றது.
பின்வரும் அம்சங்களில் இவ்லிரு பாடசாலைகளும் வேறுபட்டுக் காணப்பட்டன.
கட்டடங்கள், உபாரணங்கள் போன்ற கல்விக்கான வசதிகளின் வாய்ப்புகள்.
ஆசிரியர் தகைமைகள் வேறுபட்டதனால் வழங்கப்பட்ட கல்லியின் தர வேறுபாடுகள்.
பிரவுணுக்கும் (Brown) டொபேக்கா (Topeka) கல்வி நிர்வாக சபைக்கும் இடையிலான வழக்கில் வெவ்வேறான பாட்சாலைகள் இயல்பாகவே சமத்துவமின்மையைக் கொண்டுள்ளன என்றும் இந்தகைய ஒரு பாடசாலை முறை அரசியல் யாப்பிற்கு மாறானநாக அமைகின்றதென 1958 ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றம் விதித்தது. இருந்தும் 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் கலப்புப் பாடசாலைகளாக % மட்டுமே இயங்கின. அந்துடன் 10% வீதத்திற்கு குறைவான நீகிரே பிள்ளைகள் மட்டுமே தெற்கிலும், ல்லையிலிருந்த 17 மாகாணங்களில் காணப்பட்ட கலப்புப் பாடசாலைகளிலும் கல்வி கற்றனர். 1964 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் முன்பு குறிப்பிட்ட குடியுரிமைச் சட்டம் (1964) கல்வியில் வேறுவகையான செல்வாக்கைச் செலுந்தியது. கோட்டறிக்கையின் மூலம் ஒதுக்கப்பட்ட விடசாலைகளைக் கலப்பு பாடசாலைகளாக மாற்றியமைக்கும் பணியைத் துரிதப்படுத்துவமற்கு நிதி அமைச்சு அதிகாரத்தைப் பெற்றது. ஒதுக்கு முறையினை நீக்குவதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென கல்வி அமைச்சின் கையில் வள விநியோகம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய அரசாங்க நிதி உதவிகளைப்பெரும் கல்வி நிறுவனங்கள் யாவும், மாணவர்களின் பின்னணியைக் கருத்திற் கொள்ளாது அவர்களை அனுமதிக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. இவ்விதியை மீறும் பாடசாலைகளுக்கு மத்திய அரசாங்க உதவி மறுக்கப்படும்.
குடியிருப்பு அடிப்படையில் இனக்குழுக்களின் ஒதுக்கல்
பாடசாலைகளின் ஒதுக்கல் முறையினை நீக்கி வெள்ளையர்களுக்கும் நீகரோக்களுக்கும் வேறுபாடற்ற பொதுப் பாடசாலைகளை அமைக்க வேண்டும் என்ற இலட்சியத்தின் பயன் இதமானதாகவே காணப்பட்டது. இனப்பாகுபாட்டின் விளைவாக, நீக்ரோக்கள் தாம் செறிவாக வாழ்ந்த தென் மாகாணத்திலிருந்து, வசதி கூடிய நிலைமைகளையும் சமூக ஏற்பினையும் பெறுவதற்காக பெரும் தொகையினர் வடக்கே சென்றனர். இன ஒதுக்கு நீக்கல் பற்றி 1972இல் மதிப்பிட்ட போது தோன்றிய விடங்கள் பிலகருவனவாகும்.
9.2% நீகிரோக்களே 11 தென்மாககறுப்பினர்களுக்கு மட்டுமான பாடசாலைகளில் பயின்றனர். இது 1968ஆம் ஆண்டிலும் பார்க்க ஆகுறைவானது.
• 11:2% நீகிரோப் பிள்ளைகளே வட மாகாணங்களில் கறுப்பு இனந்தவர்களுக்கு மட்டுமான பாடசாலைகளில் கல்வி குற்றனர். இது 1968ஆம் ஆண்டின் வீதத்திலும் பார்க்க 11.2% குறைவாகக் காணப்பட்டது.
மேல்குறிப்பிடப்பட்ட புள்ளிகள் எதனைக் காட்டுகின்றன? வடமகாணங்களில் இனப்பாகுபாடு குறைவாகக் காணப்படுகின்றது. அப்படியிருந்தும் நீகிரோப்பிள்ளைகளுள் கூடிய வீதத்தினர், கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமென்ற பாட்சாலைகளில் ஏன் கற்கின்றனர்? இந்நிலைமைக்கு காரணம் வடபகுதிகளில் நிலவும் குடியிருப்பு அடிப்படையிலான இன ஒதுக்கு முறையேயாகும். நீகிரோக்கள் பெரும் தொகையில் இடம் பெயர்ந்ததாகக் காணப்பட்டது.
ஐக்கிய அமெரிக்க வட மாகாணங்கள் நீகிரோ மையங்களாக அல்லது “கறுப்பினத்தோர் பட்டிகளாக” (Belts) வெள்ளையர்களால் சூழப்பட்ட பிரதேசங்களாகக் காணப்பட்டன. இதன் நிமிந்தம் பிள்ளைகள் வெள்ளையர் அல்லது கறுப்பு இனத்தோருக்கான பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலைமையானது, இன்னோர் உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பிறப்பித்தது.
அளவின் அடிப்படையில் 4ஆம் இடத்தை எடுக்கும் டிற்றோயிற் பாடசாலை அமைப்பு |வெவ்வேறான பாடசாலைகளை இனங்களுக்கு நடாத்தியதனால் சட்டத்தை மீறியுள்ளனர் எனவும், இன ஒதுக்கலை விலக்க பஸ் வண்டிகளை உபயோகிக்குமாறும் நீதிபதி றோத் (Roth) கட்டளை இட்டார்.
பாடசாலைப் பிள்ளைகளை ஓர் குடியிருப்புப் பகுதியிலிருந்து இன்னொன்றிற்கு பஸ்களில் எடுத்துச் செல்வதனால் சகல பாடசாலைளிலும் வெவ்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளை நிச்சயமாகப் பெறமுடியும் என்ற கருத்தினையே “பஸ்ஸில் எடுத்துச் செல்லல்” என்பது குறிக்கின்றது.
சமகல்வி சந்தர்ப்பத்திளை வழங்குவதற்கான வேறு யுத்திகள்
வெள்ளையர்களுக்கும். நீகிரோக்களுக்கும் உள்ள கல்வி இடைவெளியை நிரப்புவதற்கு கையாளப்படும் இன்னொரு பெரிய யுத்தி நட்டாட்டுக்கல்வியாகும். சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு எத்துறைகளை மேம்படுத்த வேண்டும் என்பதை இளங்கண்டு அத்துறைகளுக்கு வளங்களைப் பங்கிடுவதே ஆகும்.
இந்த நோக்குடன் இரு பிரதான திட்டங்கள் அமுலாக்கப்பட்டனர்.
1. நீக்கிரோய் பின்னணியையுடைய பிள்ளைகளுக்கு விசேடமான தரத்தைக் கொணிட பாடசாலை முன் கலவியை வழங்கும் “தொடக்க மேம்பபாட்டு” (Head Start Pregramme) செயற்திட்டம்.
2. இத்தொடக்க மேம்பாட்டினைப். பாட்சாலைகளுக்குள்ளும் தொடர்கின்ற முறை (Follow Through)
இனஒதுக்கு நீக்கமோ, அல்லது நஷ்டஈட்டு (Compensatory Education) கல்வி முறையோ, செயற்றிறன் மிக்கதாக இடைவெளியைப் போக்கியுள்ளதென்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை வசதியான பாடசாலைகளிற்கூட நீக்ரோக்களின் செயற்றிறள் தொடர்ந்து ஒவ்வோர் நிலையிலும் வெள்ளையர்களிலும் பார்க்க குறைவானதாக காணப்படுகின்றது. பன்மைக் கலாசாரக் கல்வி
சமூகங்களின் பன்மைப்பனியின் காரணமாகத் தோன்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பன்மைக் கலாசாரக்கல்வி என்ற உத்தி ஒன்று பயனளிக்குமெனக் கருதப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் பன்மைக் கலாசாரக் கல்வியின் பல அணுகு முறைகளுள் மூன்று பிரதான பிரிவுகளை இனங்காண முடிகிறது. இவை கலைத்திட்டச் சீர்திருத்தம், கல்வி அடைவு. குழுக்களுக்கிடையிாள கல்வியுமாகும்.
பன்மம் களசாரக்கல்விக்கு இரு நோக்குகள் உண்டென்பதைக் கவனத்தில் கொள்ளவும் பண்மைக் காரக் கல்வித் திட்டத்தில் புதிய கற்பித்தல் நுட்பத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஒரு நோக்கம். மற்றையது ஒரு மனநிலை என்ற கருத்து கலைத்திட்டத்திற்கும் இது மாடுருவிச் செல்கிரை ஒரு பொது அனுகு முறையாக அமைய வேண்டும். முதல் தோக்கை எடுத்துக் கொண்டால் பன்மைக் கலாசாரசு கல்வி, ஒரு செயற்பாடாக நேரசூசியில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட பாட நேரங்களில் அறிவுத் தொகுதியாக கற்பிக்கப்படுகின்றது. அதாவது கணிதம், விஞ்ஞானம் போன்று பிள்ளைகள் பன்மைக் கலாசாரக் கல்வியையும் பயில்கின்றனர்.
இரண்டாவது நோக்கை கருதின் பன்மைக் கலாசாரக்கல்வி ஒரு வழக்கமான செயற்பாடாகும் இது மனநிலை, நடத்தை கூட்டுவாழ்வு என்பன அடங்கிய ஒரு வாழ்க்கைப் போக்காக பாடசாலையில் நத்தியாக்கப்பட்டது. இறுதியில் இது தெளிவான கல்வியாக முற்றுப்பெறும். சகிப்புத்தன்மையை கற்றலும் காசார மனப்பாங்கு ஒன்றைப் பெறுதலும் ஆகிய இரண்டும் இணைந்த ஒரு பன்மைக் கலாசாரக் கல்வியாக அமையும்.
மேற்குறி்ப்பட்ட யுத்திகள் ஐக்கிய அமெரிக்காவில் அமுலாக்குவதனால், கல்வியில் சம வாய்ப்பு அல்லது இனக் குழுக்களுக்கிடையே இணக்கமான உறவுகள் பிறக்கின்றன. உறுதிமொழியை முழுமையாகக் கூருவதற்கில்லை. தொடர்ந்தும் பின்தங்கிய நிலைமைகளின் மாரணமாக நீகிரோக்கள் வெள்ளை அமெரிக்கர்களின் கலாசாரப் பாரம்பரிய முறைகளை எதிர்க்கும் நிலை நோன்றியுள்ளது. இவர்கள் கிறிஸ்தவ சமயத்தை விட்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர். அந்துடன் கறுப்பு இள அதிகாரம் (Black Power) கரும் பாந்தோஸ்” (Black Panthers) (கரும் பாம்புகள் என்ற எதிர்ப்புத் தன்மையுடைய இயக்கங்கள் தோன்றியுள்ளன. இன அடிப்படையில் நாட்டின் சிதைவினைத் தடுப்பதற்கு பல முயற்சிகள் இன்று எடுக்கப்படுகின்றன என்ற கருத்திலேயே இன்று நம்பிக்கை தோன்றுகின்றது.