1961 கல்விர் சிர்திருத்தங்களினால் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்கள் நிறைவேராத்தனால் 1984 இல் மேலும் சிதிருத்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. 1984இல் கல்வி அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட முகாமைத்துவர் சீர்திருந்த அறிக்கையின்படி கல்வி அபிவிருத்திக்குத் தேவையான முகாமைத்துவத் திறன் பின்வரும் காரணிகளின் அடிப்படையிலேயே அமைச்சு, பிரதேச பாடசாலை மட்டங்களில் தீர்மானிக்கப்பட்டன
1. குறிப்பிட்ட ஒழுங்கமைப்பின் அமைப்புக்கள்
2. திட்ட நடவடிக்கைகளும் நுட்ப முறைகளும்
3. பயன்தரும் வேலை முறைகளும், செயற்படுத்தும் செயன்முறைகளும்
4. வெற்றியளிக்கும் மேற்பார்வை முறைமைகள்
5. மதிப்பீடும் பொறுப்புக்களும்
6. ஒருங்கிணைந்த தகவல் முறைமையும் அதற்குரிய தொழில் நுட்ப சேவைகளும்
7. இயக்கமுள்ள கொள்கைகளும் செயற்பாடுகளும்
தொழிற் பயிற்சியும் வேலைத்திட்டங்களும்.
முகாமைத்துவ அபிவிருத்திக்காக தெளிவான உபாயங்களைப் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே அத்தகைய திறன்கள் வளரும். கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படும் மட்டத்தில் தனிய குழுக்களின் பங்குபற்றுதல் அதிகரிக்கின்ற அளவுக்கு வெற்றியளிக்கும். இருநோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பின்வரும் முகாமைத்துவ அமைப்பு மாற்றங்கள் 1984 இல் ஏற்படுத்தப்பட்டன.
- பிரதேச கல்வித் திணைக்களம்
- கோட்டக் கல் அலுவலகங்கள்
- பாடசாலைக் கொத்தணிகள்
1984 ஆம் ஆண்டில் கல்விச் சீர்திருத்தம் செயற்பட்ட முறை
இதனை ஒரு வகையில் கல்வி முகாமைத்துவ அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கான ஒரு முன்னேற்றமான சந்தர்ப்பம் வெக்கருதலாம் பிரதேச கல்வித் திணைக்களங்களிடம் இருந்த பெருந்தொகையான அதிகாரங்களில் சில இந்தக் கோட்டக்கல்வி அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் அவற்றை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்தோடு கொத்தணி மட்ட முகாமை நடவடிக்கைகளில் குறைபாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் இவ்வலுவலகங்களினால் வழங்கப்பட்டமையினால் பாடசாலைகளின் முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஓரளவு நரம் ஏற்பட்டது. முகாமைத்துவம் மற்றும் திட்டமிடல் கலாசாரங்கள் பிரதேச மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டமையும்
நிகழ்ந்தது எனினும் முகாமைத்துவத்தில் காணப்பட்ட பல விசேட குறைபாடுகளும் இருந்தன. 1980 இல் கப்ரால் என்பவரால் கேகாலை மாவட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்றில் கல்வி முகாமைத்துவ சீர்திருத்தப்பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் விரயத்தையே காணக்கூடியதாக உள்ளது. கோட்டக்கல்வி அலுவலகம் சம்பலப் பட்டியலைத் தயாரிக்கின்றது. எனினும் அவற்றைப் பீரதேச கல்விப் பணிப்பாளர் அங்கீகரிக்க வேண்டும். சில பிரதேசங்களில் ஒரே தினத்தில் அதிபர்கள் கூட்டங்களுக்காக பிரதேச கல்வித் திணைக்களங்களுக்கும் கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கும் அழைக்கப்பட்டார்கள், பிரதேச கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைக்கு அனுப்பப்படும் ஆலோசனைகள் கோட்டக்கல்வி அலுவலகங்களினூடாக அனுப்பப்படும் போது வேறு ஆலோசனைகளும் சேர்க்கப்பட்டன. கொத்தணி மூலப் பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகள் யாவும் கோட்ட அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டதோடு திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்குமான அவ்வலுவலகங்களின் வாய்ப்புக்கள் குறைந்தன.
இவ்வாறு அதிகாரங்கள் பன்முகப்படுத்தலின் மூலம் கல்வி அமைச்சு, மாவட்டம், கோட்டம் ஆகியவற்றிடமுள்ள அதிகாரங்கள் தொடர்பாக மேலும் விசேடமான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதும் பிரச்சினைகள் இரட்டிப்பாக்கம் செய்யப்படுவதை இயன்றளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் வெளியிடப்பட்டது. பன்முகப்படுத்தலின்போது பயிற்றப்பட்ட கல்வி அலுவலர்களின் தேவையும் சிறப்பாகத் தென்பட்டது. அலுவலர் எண்ணிக்கையும் போதுமானதாக இருக்களில்லை.
மகாண சபைகளின் உருவாக்கம்
1987 மாகாண சபைச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 திருத்தத்திற்கு ஏற்ப 1988 இல் இலங்கை முழுவதிலும் அரசியல் நிருவாக அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்டன. மாகாணங்களின் நிருவாகப் பிரிவின் மூலம் கூடுதலான சுயாதீனத்தையும் சுயாதிபத்தியத்தையும் பெற்றுக்கொடுப்பதே இதன் குறிக்கோளாகும். இதன்படி எல்லா மாகாணங்களிலும் கல்விக்கென ஒரு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். மாகாணக் கல்விச் செயலாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். பிரதேசக கல்வித்திணைக்கள முறை இத்துடன் செயலிழந்தது 100-150 பாடசாலைகளை உள்ளடக்கிய ஒரு கல்விக் கோட்டம் கல்வி நிருவாகப் பணிகளுக்காக அமைக்கப்பட்டது. இதன்படி பிரதேச செயலாளர் பிரிவுகள் 268 நிறுவப்பட்டன முடிவெடுக்கும் செயன்முறை மிகக்கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
மாகாண கல்வி அமைச்சு ஏற்பட்டதோடு பிரதேசக் கல்விப் பணிப்பாளர்களின் பொறுப்புக்களும் குறைந்துள்ளன. மாகாணச் செயலாளர்களுக்கு மாகாணப் பணிப்பாளர் பொறுப்புடையவராவார். கோட்டக்கல்வி அலுவலகங்களின் கடமைகள் ஓரளவுக்கு சிக்கலானதாக உள்ளது. அவர்கள் இரட்டைப் பொறுப்புக்குட்பட்டவர்களாக உள்ளனர். ஒரு பக்கத்தில் மாகாணக் கல்வி அலுவலகத்துக்கும் மறுபக்கம் மாகாணக்கல்வி அமைச்சுக்கும் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டியவராக உள்ளனர்.
மாகாண கல்வி அமைச்சுக்கள் எதிர்க் கட்சியினரின் ஆட்சிக்குட்பட்டிருக்கும் போது கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் பல சந்தர்ப்பங்களில் தேசிய அமைச்சுக்களின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப கருமமாற்றுவர். சில சந்தர்ப்பங்களில் மாகாண அமைச்சும் மாகாண கல்வித்திணைக்களமும் ஆசிரியர் இடமாற்றங்களைச் செய்வர். தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரையில் தேசிய அமைச்சினால் எடுக்கப்படும் முடிவுகளை மாகாண கல்வி அமைச்சு எதிர்த்த சந்தர்ப்பங்கள் பல உள
கல்வி வலயங்களின் தோற்றம்
மாகாணத்தின் கோட்டக் கல்வி அலுவலகங்களின் அமைவிடங்களையும் அவற்றின் பல்வேறு கருமங்களையும் கருத்திலெடுத்து, பல கோட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கல்வி வலயங்கள் அமைக்கப்பட்டன. மாகாணத்துக்குப் பொறுப்பான பணிப்பாளருக்கும் கோட்ட அலுவலகத்துக்கும் இடையில் தொடர்பை வைத்திருத்தலும் வலய அலுவலகத்தின் பொறுப்பாகும். மாகாணப் பணிப்பாளரூடாக தேசிய அமைச்சுடனும் தேசிய கல்வி நிறுவகத்துடனும் தொடர்பை வைத்திருத்தல் வலய அலுவலகத்தினூடாக நடைபெறுகின்றது.
வலய ஒழுங்கமைப்பின் பிரதான நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.
- பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயல்முறையில் தரத்தைப் பேணுதல்.
- சேவைக்காலப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை இணைப்பாக்கம் செய்தலும் நடத்தலும்
- விசேட பாடங்களில் (உதாரணம் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழிலநுட்பம்) உச்சப் பயன்பெறுதல்.
- வெளிநாட்டு உதவி நிகழ்ச்சித் திட்டங்களை இணைப்பாக்கம் செய்தல்
- இரு கல்விக் கோட்டங்களுக்கு இடையே ஆசிரியர் இடமாற்றம், நியமனம் தொடர்பான நடவடிக்கைகள்.
- இணைப்பாடவிதான மற்றும் நாலக நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல்.
- கல்வித் தகவல்களைச் சேகரித்தல்
பாடசாலை அபிவிருத்திச் சபைகளை நிறுவுதல்
கல்வி முகாமைத்துவத் துறையில் மற்றுமொரு முன்னேற்றப்படி 1992 இல் பாடசாலை அபிவிருத்திச் சபைகளை உருவாக்கியதோடு ஏற்பட்டது. பாடசாலை முறையில் உள்ள வேலைத்திட்டங்களை மேலும் வெற்றியடையச் செய்வதற்காக இச்சபைகள் அமைக்கப்பட்டன சமுதாயத்தினதும் பெற்றோரினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதந்தே இதன் பிரதான குறிக்கோளாகும்.
பாடசாலை அபிவிருத்திச் சபைகளின் கடப்பாடுகள்
- பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை விருத்தி செய்வதற்கான கருத்துக்களைச் சமர்ப்பித்தல். ஊக்குவித்தல், இலக்கியம் சங்கம், சமூக மற்றும் வெளிநிகழ்ச்சித் திட்டங்களை
- விளையாட்டு
- சமய, கலாசார ஒழுக்க நிகழ்ச்சித் திட்டங்களை வாக்குவித்தல்.
- பாடசாலை கட்டட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு உதவிசெய்தல்
- நூலக மற்றும் கற்றலுக்கான பொருள்களைப் பெற்றுக்கொள்ள உதவி செய்தல். பாடசாலை நலனோம்பல் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல்
- பாடசாலைகளின் தனித்தன்மையையும், மரபுகளையும் பாதுகாத்தல். viii பொதுஜன ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பதன் மூலம்
- பாடசாலைக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான தொடர்பை வைந்திருத்தல் is அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் உதலிகளிலிருந்து உச்சப் பயனைப் பெற்றுக்கொள்வ
- மாணவர் ஆளுமை வளர்ச்சிக்கான செயற்பாடுகளை ஏற்பாடு செய்தல்.
- சிறு பாடசாலைகளில் நிலவும் பற்றாக்குறை கஷ்டப் பிரதேசங்களில் பெற்றோர் எதிர்நோக்கும் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக பங்குபற்றுதல் மிகக் குறைந்த மட்டத்திலிருத்தல்.