சில நாடுகளில் கல்வி முகாமைத்துவம் மத்தியமயப்படுத்தப்பட்டுள்ளது. (மத்தியில் திரண்டுள்ளது) வேறு சில நாடுகளில் பெருமளவுக்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. அல்லது பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி பற்றிய தேசிய மட்டத் தீர்மானங்கள் பெருமளவில் மத்திய அமைச்சின் மூலம் எடுக்கப்பட்டாலும் பிராந்தியங்களின் தேவைகளுக்குப் பொருத்தமான வீதத்தில் பிராந்திய அமைச்சுக்களினால் செயற்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் 1939 இன் 31 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின்படி கல்வித்திணைக்களம் மத்திய அதிகார சபையாக மாற்றப்பட்டது. இந்நிலை 1960 வரை தொடர்ந்திருந்தது. 1961 இல் பண்டாரவளையில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் மத்தியமயப்படுத்தப்பட்ட நிருவாக முறையை மாற்றியமைக்க கலந்துரையாடப்பட்டதோடு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப 1966 இல் 23 பிரதான கல்விக் காரியாலயங்கள் மாவட்டங்கள் தோறும் நிறுவப்பட்டன. கலவிப் பணிப்பாளர் பதவி பணிப்பாளர் நாயகம் என்று உயர்த்தப்பட்டது. கல்விச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சும் கல்வித்திணைக்களமும் இணைக்கப்பட்டன. பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம் மூவர் ஆரம்ப நிலை, இடைநிலை, தொழில் நுட்பக்கல்வி ஆகியவற்றுக்குப் பொறுப்பாக நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டனர்.
1960 களில் பரவலாக்கலில் ஒரு முன்னேற்றம் காணப்பட்டதாயினும் அது மிக மந்தமான நிலையில் இருந்தது. 1975 இல் 23 பிரதான கல்விக் காரியாலயங்கள் 25ஆக அதிகரிக்கப்பட்டன. மெலிமேலும் பன்முகப்படுத்தும் நோக்கமும் இருக்கலாம்.
1981 இல் கல்வி முகாமைத்துவத் துறையை பன்முகப்படுத்துவதற்கு அப்போதிருந்த 9500 பாடசாலைகளையும் 1000 கொத்தணிகளாக ஒழுங்கமைத்தமை பிரதான மாற்றமாகும். இதன் குறிக்கோள் சுயநிருவாகத்திற்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தலாகும். படசாலை முகாமைத்துவ
பாடசாலைக் கொத்தணிகளை அமைத்தல்
1981 இல் பாடசாலைக் கொத்தணிகள் அமைக்கப்பட்ட போது, பிரதேச கல்வித் திணைக்களத்திடமிருந்த அதிகாரங்களுள் சில கொத்தணிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கடமைப் பழு அதிகரித்தமை காரணமாக கல்வி விருத்தி நடவடிக்கைகளைச் செய்வதற்குப் போதிய நேரம் கல்விக் காரியாலங்களுக்கு இருக்கவில்லை. பாடசாலைப் பரிசோதகர்களினால் செய்யப்பட்ட கடமைகள் பாடசாலைக் கொத்தணிகளிடம் விடப்பட்டன.
ஒரு பிரதேசத்தில் உள்ள 10-12 க்கு இடைப்பட்ட பாடசாலைகளை மேலும் சிறந்த ஒழுங்கமைப்புக்காகவும், முகாமைத்துவத்துக்காகவும் அபிலிருத்திக்காகவும் ஒரு அலகாக அமைக்கப்பட்டன. கொத்தணி மூலம் பாடசாலை அதிபரிடம் முகாமைத்துவ அதிகாரங்களும் பொறுப்புக்கள் பலவும் ஒப்படைக்கப்பட்டள கொத்தணிகளை அமைத்ததன் ஒரு நோக்கம் மிகச் சிறந்த வள முகாமைத்துவத்தை நடத்துவதாகும். பாடசாலை மட்டத்தில் கல்வி அபிவிருத்தியும் ஒழுங்கமைப்பைத் திட்டமிடும் அலகும் பாடசாலைக்கொத்தணியிடம் இருக்கி வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொத்தணி ஒன்றிலுள்ள மாணவர்களின் முழு எண்ணிக்கை 3000-5000 ஆகும்.
கொத்தணிகள் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கங்கள்
கொத்தணியைச் சேர்ந்த பாடசாலைகளில் சிறந்த மேற்பார்வையுடனான பரிசோதனைச் செயன்முறைகளினூடாகக் கல்வியில் தரவிருத்தியை ஏற்படுத்தல்
கொத்தணி வேலைத்திட்டங்களில் பங்கெடுக்கச் செய்வதன் மூலம் குறை விருத்திப் பாடசாலைகளை முன்னேற்றுதல்.
திறமைவாய்ந்தவர்களினால் பாடசாலை முகாமைத்துவம் செய்யப்படுதல், உதாரணமாக, கொத்தணி அதிபரிடம் திட்டமிடுதல், மேற்பார்வை, மதிப்பிடுதல் போன்ற பணிகளை ஒப்படைத்தல்.
குறைபாடுகளைக் குறைத்துக் கொள்ளல்.
உச்சப் LALNENIE பெறுதல்.
வரையறுக்கப்பட்ட கொத்தணி யொன்றிற்குரிய பௌதிக ஆளணி வளங்களயும் சிறப்பாகப் பயன்படுத்திக்
கொத்தணிக்குரிய வளங்களையும் சேவைகளையும் விருத்தி செய்துகொள்ள சமுதாயத்தின் ஒத்துழைப்பை உயர்ந்த அளவில் பெற்றுக்கொள்ளல்
பாடசாலைக் கொத்தணிகளை அமைக்கும் போது எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்கள் எவ்வளவு தூரம் நிறைவேறியுள்ளன?
கொத்தணி மூலப் பாடசாலை அதிபர்கள் முகங்கொடுத்த முகாமைத்தனப் பிரச்சினைகள் கொத்தனிக்குள் வளங்களைப் பங்கிடுவதைச் செயற்படுத்தும் போது தோன்றிய ?