மேற்பார்வை

“மேற்பார்வை” என்பது பாடசாலை முகாமைத்துவத்தில் இடம்பெறும் கட்டுப்பாடு (Control) எனப்படும் முகாமைத்துவச் செயலின் கீழ் கணிக்கப்படுகிறது. அத்துடன் அது கல்வி நோக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு அவசியமான தரவு/தகவல்களைத் திரட்டும் ஒரு செயன்முறையும், வழிகாட்டும் உத்தியும் ஆகும். கல்விச் செயல்களின் விருத்திக்கு மேற்பார்வை அவசியமாகும். பாடசாலை மேற்பார்வை என்பது கடுமையான கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதல்ல என்னும் பொருளில் நோக்கப்படல் வேண்டும். இதன்படி மேற்பார்வையை வழிகாட்டும் செயன்முறைக்கான முகாமைத்துவச் செயலாகவும் கருதமுடியும். எதிர்பார்க்கும் நோக்கங்கள் உரிய நேரத்தில் சரியான முறையில் நிகழ்கின்றனவா என்பதைக் கண்டறிந்து அவசியமான பரிகாரங்களை மேற்கொள்ள மேற்பார்வை அவசியமாகும். குறிப்பிட்ட நோக்கங்களை அடையக்கூடிய ஏதாவதொரு செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காகக் குறிப்பிட்ட காலத்துக்குள் விஞ்ஞான முறையாக மேற்கொள்ளும் மதிப்பீடே மேற்பார்வையாகும்.

பாடசாலையின் விளைதிறன்மிக்க மேற்பார்வை

பாடசாலையின் விளைதிறன் என்பதனால் கருதப்படுவது யாது? விளைதிறனுள்ள பாடசாலையின் பண்புகள் யாவை, அப்பண்புகளை மதிப்பீடு செய்வது எவ்வாறு. என்னும் வினாக்களுக்கு இம் மொடியூலில் பாடசாலையின் விளைதிறனும் வினைத்திறனும் வளமுகாமைத்துவமும் என்னும் LITL அலகினைக் கற்று விடைகளை அறிந்துகொண்டிருப்பீர்கள். ஏதாவதொரு பாடசாலை தான் எதிர்பார்க்கும் நோங்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு ஏற்ப அப்பாடசாலையின் விளைதிறன் அளவிடப்படுகின்றது என்பதை நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள். எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்குப் பாடசாலை செயற்படும் இயல்பையும், அவ்வியல்பு பொருத்தமானத பொருத்தமற்றதா என்பதையும் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும் பிரதான உபகரண மேற்பார்வையாகும்.

மேற்பார்வை மட்டங்கள்

கல்வியமைப்பில் பல்வேறு மட்டங்களில் மேற்பார்வை நடைபெறுகின்றன. அவையாவன.

1. பாடசாலை மட்டம்

2 வலய மட்டம் /கோட்டமட்டம்

மாகாண மட்டம் அமைச்சு மட்டம்

பாடசாலை மட்ட மேற்பார்வை

பாடசாலை மட்டத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்குப் பொறுப்பேற்றுள்ள பலர் காணப்படுகின்றனர். அவர்கள் பின்வருமாறு

அதிபர்

பிரதி அதிபர்

பிரிவுத் தலைவர்கள்

பாடத்தலைவர்கள்

பாட இணைப்பாளர்கள்

வகுப்புப் பொறுப்பாசிரியர்

பாடசாலை மட்டத்தில் மேற்பார்வையின் அவசியமும் அதன் நோக்கங்களும்

கல்வி அபிலிருத்திக்குப் மட்டத்தில் மேற்பார்வை அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகும். இம் மேற்பார்வை சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டால் அது பாடசாலையின் அபிவிருத்திக்குப் பெரும் துணையாக அமையும். மேற்பார்வையின் அவசியத்தையும், அதன் நோக்கங்களையும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. பாடசாலையில் பயனுள்ளதும், விருப்புக்குரியதுமான சூழலை ஏற்படுத்தம்.

2. பௌதிக, மனித வளப்பயன்பாட்டில் உச்சமட்ட வினைத்திறனை உருவாக்குவதற்கு வழிகாட்டல்

3. மாணவர்களின் சாதனை மட்டத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருதல்.

4. ஆசிரியர்களின் தொழில்சார் அபிவிருத்திக்காக வழிகாட்டுவதும், பொருத்தமான அறிவுறுத்தல்களை வழங்குவதம்.

5. பங்கேற்கும் முகாமைத்துவச் செயல்களை விருத்தி செய்தல்

6. பாடசாலைக்கும் சமுதாயத்துக்குமிடையிலான தொடர்பை விருத்தி செய்தல்

7. பாட இணைப்பாக்கச் செயல்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தல்

8 பொறுப்புக்கள் தொடர்பான வினாக்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தல்.

23.3 கல்வி நிறுவன மேற்பார்வை வேலைத்திட்டத்தில் இடம்பெற வேண்டிய அமிசங்கள்

கல்வி நிறுவன மேற்பார்வை வேலைத்திட்டத்தில் இடம்பெரவேண்டிய சில அமிசங்கள் கல்வி அமைச்சின் இலக்கம் 17/92 சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அவையால

1. கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவமும், ஒழுங்கமைப்பும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top