வகுப்பறை மேற்பார்வைச் செயல்முறைகள்

நேரகாலத்துடன் சிறந்த முறையில் மேற்பார்வையைத் திட்டமிட்டு வகுப்பறை மேற்பார்வைச் செயல்களில் ஈடுபடுதல் அதிபர், பிரதி அதிபர் உட்பட முன்பு குறிப்பிடப்பட்ட மேற்பார்வைண அதிகாரிகளின் கடமையாகும். குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது ஓர் ஆசிரியரின் வகுப்பறைச் செயல்களை மதிப்பீட்டுக்குட்படுத்துதல் விளைதிறனுள்ள கல்வி நிறுவனத்தைத் தோற்றுவித்துக்கொள்ள பேருதவியாக அமையும் மேற்பார்வையின் போது பாடம் தொடர்பாக ஆசிரியரின் விளக்கம், கற்பித்தலுக்கான பாட ஆயத்தக் குறிப்புக்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறை. கற்றலுக்கு வகுப்பறையை ஒழுங்கமைத்துள்ள முறை. கற்பித்தலுக்கு செலவழிக்கப்படும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ள வீதம், நேரத்தைப் பயன்படுத்தும் முறை, சுற்றல் கற்பித்தல் நுணைச் சாதனங்களைப் பயன்படுத்தல், பாடத்தை ஆரம்பித்தல் பாடத்தைப் பதித்தல், நோக்கங்கள் நிறைவேற்றியுள்ளமையைக் கண்டறிவதற்கான மதிப்பீடு ஆசிரியர் மாணவர் தொடர்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். ஒரு

வகுப்பறை மேற்பார்வை மிகவும் சுமுகமான முறையில் நடைபெற வேண்டும். மேற்பார்வையாளன விருப்புக்குரிய ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும் செயற்படுதல் வேண்டும். ஆசிரியர்களின் குறைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள் உதவுவதற்காக வந்துள்ள ஒரு நண்பர் என்ற உணர்வு மேற்பார்வைக்குட்படுபவர்களின் மனதி உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

வகுப்பறை மேற்பார்வைக்கான அவதானிப்பு அட்டவணை

வகுப்பறை மேற்பார்வையினால் திருப்தியான விளைவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானான மேற்பார்வையாளர் சிறந்த ஆயத்தத்துடன் செல்ல வேண்டும். மேற்பார்வைச் செயலுக்கு பொருத்தமான வழிகாட்டல் குறிப்பொன்றைப் பயன்படுத்துவது பயனுள்ள முறையில் வகுப்பா மேற்பார்வையை நிறைவு செய்துகொள்ள சிறந்த வழிகாட்டலாக அமையும். வழிகாட்டலுக்கு பொருத்தமான அவதானிப்பு அட்டவணை கீழே தரப்படுகிறது.

ஆசிரியர்:

1. பாடத்தை ஆரம்பம் செய்த விதம்.

2. பாடத்தின் நோக்கம் மாணவர்களுக்குத் தெளிவானதா? என்பது.

3. ஆசிரியர்களின் பட ஆயத்தம்

4. பின்பற்றிய கற்பித்தல் முறையின் பொருத்தமும், பொருத்தமின்மையும்

5. நவீன கற்பித்தல் முறைகளைப் பாவித்தல்.

6. கற்பித்தல் செயல்கள் பாடத்தின் நோக்கங்களுடன் தொடர்புபட்டுள்ள விதம்,

7. கற்றல்-கற்பித்தல் செயல்களினூடாகத் தோன்றும் கல்விச் சாதனங்களை ஆசிரியர் பயன்படுத்திக்கொள்ளும் விதம்.

8. கேட்டல், பார்வைத் துணைச் சாதனங்களின் பாவனையும், அவற்றின் வெற்றியும்.

9. கரும்பலகை பொருத்தமான முறையில் பயன்படுத்தப்பட்டதா?

10. வகுப்பு ஒழுங்கமைப்பு பாடத்தின் நோக்கங்களுக்கு அனுகூலமானதா?

11. மாணவர்கள் கற்றவைகளைப் பதித்துக்கொள்ளவதற்கான மேற்கொள்ளப்பட்டனவா? நடவடிக்கைகள்

மாணவர்:

12 மாணவர்கள் கற்றலுக்காக ஊக்குவிக்கப்பட்டார்களா?

13. மாணவர்களின் துலங்கல்களில் பண்புகள் காணப்பட்டனவா?

14. மாணவர்கள் உயிர்த்துடிப்புடன் பாடத்தில் நேரடியாகக் கலந்து கொடார்களா?

15. மாணவர்கள் எவ்வளவு தூரம் பாடத்தின் நோக்கங்களை அடையுப் பெற்றுள்ளனர்.

24 மேற்பார்வையாளரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்

மேற்பார்வையில் ஈடுபடும் சகல உத்தியோகத்தர்களும் நிறைவேற்ற வேண்டிய

பங்களிப்புக்கள் இருக்கின்றன.

1. மேற்பார்வையாளர் எப்போதும் ஆசிரியர்களின் முன்னேற்றத்தைப் கரிசனையுள்ள ஒரு நல்ல நண்பராக இருத்தல் வேண்டும். பற்றி

2. கற்பித்தல் மற்றும் வருப்பறை முகாமைச் செயல்கள் பற்றி அறிவுறுத்தல்கள் வழங்கும் விசேட ஆலோசகர்களாக இருத்தல் வேண்டும்.

3. ஆசிரியர்களுக்கு ஊக்கமளிக்கும் ஓர் ஊக்குவிப்பாளராக இருத்தல் வேண்டும். 4. மற்றோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பும் கொடுக்கும் ஒரு ஜனநாயக வாதியாகஇருத்தல் வேண்டும்.

5. பிழைகளைத் திருத்திக்கொள்ள வழிகாட்டும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருத்தல் வேண்டும்.

6. ஒத்துழைப்பாளராகவும் நோக்குனராகவும் இருத்தல் வேண்டும்.

7. எப்போதும் பக்கச் சார்பின்றி நடுநிலையிலிருத்தல் வேண்டும் 8.

மேற்பார்வைக்குட்படுபவர்களுக்குத் தொந்தரவு ஏற்படக்கூடிய முறையில் தனது அதிகார பலத்தைக் காட்டாதவராக இருத்தல் வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top