மேஜி ஆட்சிக் காலத்தில் ஜப்பானிய கல்விச் சீர்திருத்தங்கள்

காலந்தோறும் ஜப்பானில் ஆட்சிபுரிந்த பல்வேறு அரச பரம்பரைகள் பற்றி உங்களுக்குத் தெரியாது இருக்கலாம் 1868 ஆம் ஆண்டு வரை ஜப்பானை ஆண்ட டொகுகாவா (TOKUGAWA) குடும்பம் தனிமை பேணும் கொள்கையை அதாவது பிறநாட்டு விவகாரங்களில் பங்கொள்ளாக் கொள்கையைப் பின்பற்றியது. எனயே அது தனக்கும் அண்மையில் உள்ள ஆரிய நாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தது. இக்காலப்பகுதியில் ஜப்பானில் அமைதி நிலவியது. ஆனால் உலகின் ஏனைய பகுதிகளில் நிகழ்ந்த தரித தொழிற்கல்வி விஞ்ஞான முன்னேற்றம் பற்றி அந்நாடு பூரண அறியாமையில் மூழ்கியுள்ளது.

பொருகாவா குடும்பத்தின் பின்னர் ஆட்சிபுரிந்த மேஜி மன்னர்கள் இரு முக்கிய இல்க்குகளை ஏற்றுக்கொண்டனர். அவை ஜப்பானிய நிறுவனங்களின் சீர்திருத்தமும் குடியேற்ற முயற்சியிலிருந்தும் நாட்டைப் பாதுகாத்தலும் ஆகும். அவர்கள் மையநிலைக் கோட்பாட்டு முறையை நிறுவினார்கள் “மேலை நாட்டுத் தொழிற் கலை விஞ்ஞானம் கீழைத்தேய ஆள்மீகம் என்னும் இரண்டையும் இணைக்கும் பூட்கையை உருவாக்கினார்கள். மக்கள் பிரதிநிதியாட்சி முறையை நிலைநாட்டினார்கள் கல்வித்துறையைப் பொறுத்தவரையில் மக்கள் கல்வி மேலோர் கல்வி என்னும் இரண்டையும் அவர்கள் மதித்தார்கள். இக்கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக விளங்கியவர் அக்காலப்பகுதியில் நல்வி அமைச்சராகப்

பணிபுரிந்த மொறி அரிநொறி (Mori Arinorn) ஆவார். மேஜிகாலப்பகுதியில் புகுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய அமிசங்கள் சிலவற்றை இப்போது நாம் பரிசீலிப்போம்.

மக்கள் கல்வி

1872 இல் பிரகடனம் செய்யப்பட்ட ஆதாரக் கல்விக் கோவை” (Basic Education Code) பின்வருமாறு கூறுகின்றது.

“படிப்பறிவு’ எழுத்தறிவு இல்லாதவர்கள் உள்ள ஒரு குடும்பமோ சமுதாயமோ இருக்க மாட்டாது. மாணவர்களின் பாடசாலை வரவிற்குத் தடைவிதிக்காமை, அவர்களை அன்புடன் பராமரித்தல் ஆகியவற்றை அவர்களின் பாதுகாவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆன்மீகப் பயிற்சி

இளையோர் யாவரும் தொடக்க நிலைப்பள்ளியில் நான்கு ஆண்டுகள் பயின்று அறிவுத் திறன்களையும் தேசிய அறநெறிக்கோட்பாடுகளையும் ஈட்டிக்கொள்ள வேண்டும் ஆணை/கட்டளை விதிக்கப்பட்டது. அறநெறிக்கல்லி தேசிய அபிவிருத்திக்குத் தனிநபர்கள் ஆற்றும் பங்கு என்பன அழுத்தமாக வலியுறுத்தப்பட்டன.

பாடசாலையின் மையநிலைக் கட்டுப்பாடு

ஜப்பான் இக்காலப் பகுதியில் இசைவாக்கத்தை இறுக்கிவிடும் நோக்கத்துடன் நாடு முழுவதும் பரந்து காணப்பட சுமார் 300 அலகுகளில் உள்ள பாடசாலைகள் மீதுள்ள கட்டுப்பாட்டை மைய நிலைப்படுத்தியது. பாடாலை அதிபர்கள் நியமனம். நிதிஒதுக்கீடு, மத்திய அரச அதிகாரிகளின் மேற்பார்வை தேசிய பூட்கைக்கு அமைவாகப் பொருத்தும் தேவை என்பன காரணமாகப் படிப்படியாக வேற்றுமை குறைய ஒரு சிரத்தன்மை வளர்ந்தது தளியார் துறைப் பாடசாலைகள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டன. ஆனால் பாடசாலை மேற்பார்வைப் பணிபுரியும் அரசுத்துறைப் பரிசோதகர்களின் சிபார்சின்/விதப்புரையின் அடிப்படையில் தனியார் பாடசாலைப் பணிப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வழிவகை இருந்தது.

திறமை அடிப்படையில் மேலோர் தெரிவு

ஜப்பானிய அரசு பொதுமக்கள் கல்வி பெறும் வாய்ப்பை முன்னேற்றியதுடன் தேர்ந்தெடுத்த சிலருக்குரிய மேலோர் கல்வி அபிவிருத்தியிலும் தனது கவளத்தை ஒரு முனைப்படுத்தியது. ஜப்பானியக் கல்வி முறைமையின் சிகரமாக மதிக்கப்பட்ட ”சக்கரவர்த்தி பல்கலைக்கழகம் (Imperial University) இம்மேலோர் கல்வியை வழங்கும் உன்ளத நிலைக்கான மையமாக விளங்கியது. இப்பல்லைக்கழகத்தில் பயிலும் தெரிவு பெருக்கடும் போட்டி நிலலியது தொடக்க நிலை ஆரம்ப நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்ய முடியுமென நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர்.

தொழில் நுட்பத் தொகுதியுள்ள தொழிலாளர் அணி

தொடக்கநிலைப் பாடசாலைக்கும் சக்கரவர்த்திப் பல்கலைக்கழகத்திற்கும் இடைப்பட்ட நிலையிலே பல்வகைப்பட்ட, பல்வழிச் செல்லும் கல்லி வாய்ப்புக்களை வழங்குவதற்காகத் திரு. மொறி அரிநொறி இடைநிலைக்குப் பிற்பட்ட கல்விந்துறைக்குரிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். நடுநிலைப் பாடசாலை. உயர்நிலைப் பாட்சாலை என்பவற்றிற் பெறும் கல்வியின் சக்கரவர்த்திப் பல்கலைக்கழகத்திற் சேர்தலே கௌரவமான வழி என்று கருதப்பட்டது. ஏனைய கல்வி வழிகளில் முன்னேறுவோர் பல்லேறு தொழிற் பள்ளிகளில் ஆசிரியக் கல்லூரிகள், தொழில் நுட்பப் பாடசாலைகள், அரை-வாண்மைப் பள்ளிகள்/அரை உயர்கௌரவத் தொழிற்பள்ளிகள் என்பவற்றிற் சேர்ந்து பயின்றனர். இம்முதல் முயற்சி முழுப்பயனைத் தரவில்லை. 1903 இல் “சென் மொங்க்கொரை என்னும் பெயர்கொண்ட “பாடசாலைக்கான சிறப்புக் கட்டளை அறிமுகம் செய்யப்பட்டது. இது பொறியிலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் ஆகியோருக்குரிய சீரான பயிற்சித் திட்டங்களுக்கு வழிகோலியது.

சுதந்திரத்தின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் பற்றி இப்போது சிந்திப்போம்.

1948க்கும் 1972க்கும் இடையில் பின்வருவன தொடர்பாக இலங்கையில் அதே போன்ற

சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களை உங்களால் இளங்காண முடியலாம்.

1. கல்வி வாய்ப்பின் விரிவாக்கம்

2. தொழில்நுட்பப் பயிற்சியின் முன்னேற்றம்

3. பல்கலைக்கழக கல்வி வாய்ப்பின் பெருக்கம்

இந்தச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதில் இலங்கை ஜப்பானைப் போலவே ஒரே வகைக் காரணிகளால் உந்தப்பட்டது. ஆனால் இந்தச் சீர்திருத்த நோக்கங்களில் ஜப்பான் வெற்றியடைய இலங்கை தோல்வியுற்றதாகத் தோன்றுகின்றது.

ஜப்பான் இச்சீரதிருத்தங்களைச் சமகாலத்தில் புகுந்த இலங்கை அவற்றை அடிப்படையாக அறிமுகம் செய்தது என்பதைக் கவனத்திற் கொள்ளவும். மேலும் ஜப்பானில் நடைமுறைப்படுத்தப்பட்டது போல இலங்கையிலே கல்வித் துறை சீர்திருத்தங்களோடு இணைந்து அமுலாக்கவில்லை.

ஜப்பானியக் கல்வியின் நோக்கங்களும் கோட்பாடுகளும்

ஜப்பானியக் கல்வியின் நோக்கங்கள் கோட்பாடுகள் பற்றிய விளக்கம் பயன்மிக்கதாக அமையும். ஏனெனில் இவை ஜப்பான் இரண்டாம் உலகமகாயுத்தத்தில் ஈடுபட்டதன் விளைவாக ஓரளவுக்கு வகுக்கப்பட்டன. ஜப்பான் உலக மகாயுத்தத்தில் ஈடுபட்டமையால் 1945ஆம் ஆண்டு பொட்ஸ்டாம் பிரகடனம் பின்வருமாறு ஆணையிட்டது. போர்க்குணமுள்ள, இனச் சார்புள்ள/இனங்கள் பற்றிய சக்திகள் யாவும் உடனே களையப்பட வேண்டும் எனவே பாடசாலைத்திட்டத்தில் இடம்பெற்ற அறநெறிக் கல்வி, புவியியல், வரலாறு என்னும் பாடங்கள் கல்வியூட்டலிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஆசிரியர்கள் வேலையிழந்தனர்.

அமெரிக்க கல்வியாளர்குழு ஒன்று 1947இல் சில் கல்விச் சீரதிருத்தங்களை முன்மொழிந்த சி)திருத்த ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டது. சனநாயர் சமூகம் ஒன்றுக்குப் பொருத்தனின கல்வி முறைமையை அபிவிருத்தி செய்வதன் தேவையை இச்சீர்திருத்தங்கள் அழுத்தம எடுத்துக்கூறின கல்வியின் குறிக்கோள் பிஸ்வருமாறு எடுத்துரைக்கப்பட்டது.

உடல் வலிமையும் மனவலிமையும் உள்ள உண்மை, நீதி, தனியாளின் தகைமை என்பவற்றிற்கு மதிப்பு அளிக்கின்ற உயர்வான பொறுப்புணர்வு, தொழிற்கண்ணியம் சுதந்திரமான சிந்தனை என்பவற்றைச் சொத்தாகக் கொண்டுள்ள அமைதிபேணும் அரசுக்கும் சமுதாயத்திற்கும் பங்களிப்புச் செய்யும் ஆற்றல்உள்ள தனிநபர்களின் ஆளுமையை விருத்தி செய்தல்.

ஜப்பானின் 1947 ஆம் ஆண்டு யாப்பு (உட்பிரிவு 26) அரசின் கல்விப் பொறுப்பை பின்வருமாறு உரைக்கின்றது.

“தனிநபர்கள் அனைவரும் சம கல்வி பெறும் உரிமை உண்டு தமது பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள எல்லா பிள்ளைகளும் கல்வி பயிலுதலை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்த வேண்டும் இக்கட்டாயக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்

கல்வி பற்றிய அடிப்படைச் சட்டம் (1947) பின்வரும் முக்கிய கோட்பாடுகளை தன்னகத்தே ஒன்ற சேர்த்துள்ளது.

  • சமவாய்ப்பு
  • கூட்டுக்கலவி
  • சமூகநோக்குக்கல்வி
  • கட்டாயக் கல்வி
  • பொதுமக்கள் கல்வி
  • சமயம் கல்வி
  • கல்வி மீதாள பொருத்தமில்லாக் கட்டுப்பாட்டைத் தடுத்தல்

ஜப்பானிய பாடசாலைக் கலைத்திட்டதிற்காக விவரிக்கப்பட்ட குறிக்கோளிலிருந்து இன்றைய ஜப்பானிய கல்வியின் நோக்கங்கள் குறிக்கோள்கள் பற்றிய 40 விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே அமுலில் இருந்த மேலோர்க்குரிய கலைத்திட்டத்தை அனைவருக்குமுரிய முறையினுள் இணைக்கும் வகையில் மாற்றியமைக்கும் பெருஞ்சவாலை கல்வியாளர்கள் 1970களில் எதிர்நோக்கினர் ஏனெனில் கீழ்மட்ட இடைக்கல்வியைர் பூர்த்திசெய்தவர்களில் 1945%விழுக்காட்டினர் மேல்மட்ட இடைநிலை பாடசாலைகளில் அனுமதி பெற்றிருந்தனர், எனவே ஆணைக்குழு, “மிகச் செழிப்பான். மிகப்பரந்த கல்வி” வழங்கும் ஏற்பாடு பற்றிய முன்மொழிவுகளை எடுத்துரைத்தது இப்போதுள்ள கலைத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் பிஸ்வருவனவாகும்.

  • பூரண விருத்தியுடைய மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தல்
  • தனிநபரின் விருத்திக்கும் கருத்து வெளிப்பாட்டிற்கும் உரிய வாய்ப்புக்கள் வழங்கல்.
  • ஒரு பிரஜையின் வாழ்க்கைக்கு வேணிடிய அடிப்படை அறிவுத்தேட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • தனியாளின் சிறப்பியல்புகள், திறன்களுக்குப் பொருந்தமான கல்வியை வழங்கள்.

`செழிப்பும் பரப்பும்” என்னும் பிரச்சாரச் சுலோகத்தின் பயனாகப் பாடசாலைக் கலைத்திட்டம் படிப்படியாக நெகிழ்ச்சியடைந்து பன்முகப்படுத்தப்பட்டது. இக்காலப் பகுதியில் மாணபர்களின் தொந்தரவு, பகிடிவதை, பாடசாலைக் குற்றச் செயல்கள் என்பன் தீவிரம் அடைந்தன. எனவே பிரதமமந்திரி 1984 அலுவலகத்தின் நேரக்கட்டுப்பாட்டின் கீழ் சீர்திருத்தத்திற்கான தேசியகுழு ஒன்றை மூன்றாண்டுகள் பனர்புரிய நியமித்தார். கல்விச் நனது இத்தேசிய குழு தனது முன்மொழிவுகளை ஆலோசனைகளை 1985இய சமர்ப்பித்தது இக்குழு கல்வித்துறையில் உள்ள குறைபாடுகள், ஒருசீர் தன்மை, இறுக்கம்/நெகிழ்ச்சித் தன்மை. திறந்தநிலை இல்லாமை/புதிய சிந்தனைகளை வரவேற்காமை, உலக நோக்கு இல்லாமை என்னும் மூலங்களிலிருந்து முளைத்தன எனச் சுட்டிக் காட்டியது. கல்வியூட்டல் என்பது சலிப்பூட்டுவதாய். மூடுநிலையுடையதாய், ஆசிரியர்-இயக்குவதாய் காணப்படுவதாக மேலும் அது எடுத்துக்கறியது. இன்னும் மாணவர்களின் சிந்தனைத்திறன், சுதத்திரமாகச் திமாளம் செய்யும் சக்தி, படைப்பாற்றல் என்பவற்றை மேம்படுத்தும் தேவையும், வகுப்பறைக் கற்பித்தல், மன்னஞ்செய்தல் என்பவற்றிற்கு மீதமிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கும் போக்கை குறைக்க வேண்டிய தேளைவையும் அது கட்டிக்காட்டியது.

கலைத்திட்டச் சீர்திருத்தம் செய்யும்போது கருத்திற்கொள்ள வேண்டிய நான்கு குறிக்கோள்களைக் கலைத்திட்ட ஆலோசனைக் குழு பின்வருமாறு விவரித்துள்ளது.

1. மாணவர்கள் புரிந்துணர்வு. பூரணவளர்ச்சி, ஆன்மீக வலிமை என்பவற்றை அடைய உதவுதல் 2. சுய கற்றலை வலியுறுத்தும், ஆக்கபூர்வமாகச் சமூக மாற்றத்தை தழுவலும், 3. அனைத்துப் பிரஜைகளுக்கும் அத்தியாவசியமான அடிப்படை அறினை வலியுறுத்தல்.

4. மாணவர்கள் உலக விவகாரங்களிற் பரந்த விளக்கம், ஜப்பானிய பர்பாண்டு மரபுகள் மீது மதிப்பு என்பவற்றை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும்.

மேற்குறித்த நோக்கங்களை இலங்கையின் கல்வி நோக்கோடு ஒப்பிட்டு நோக்குவீர்களாயின் மொத்தத்தில் இக்கல்வி நாடுதோறும் நாட்டுக்குநாடு நோக்கங்கள் பொது அளை கொள்விர்கள். பெரும்பாலான நாடுகள் பெரிதும் நோக்கங்களாக வேறுபடுவதில்லை இவை போன்ற நாடுகளையும் அடையவேண்டுமென்ற நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றன. இருத்தலையும் என்பதையும் அறிந்து கோள்களையு குறிக்ே மீன்நோக்கு வரிசையில், ஜப்பான் அமுலாக்கிய நடவடிக்கைகள் சிலவற்றைச் சுருக்கமாக குறித்துக்கொள்வோம்.

  • 1900 கல்வியிலல் முதல் நான்கு ஆண்டு காலம் கட்டாயம் ஆனது பின்னர் நீக்கப்பட்டது.
  • 1908 பொதுத்தொடக்க நிலைக்கல்விக்காலம் ஆறு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டது. மாணவர் வரவு கட்டாயமாக்கப்பட்டது.
  • 1947-அடிப்படை /ஆதாரக்கல்விச் சட்டமும் பாடசாலைக்கல்விச் சட்டமும் ஒன்பதாண்டு காலம் நீடிக்கும், தொடக்கநிலைக் கல்வி, கீழ்மட்டக் கல்வி கட்டாயமாக்கப்பட்டன. என்பன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top