மதிப்பீடு

மதிப்பீடு என்னும் சொல் பல தனிப்பட்டவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறுபட்ட பல கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதன் உண்மையான பொருளையும், மதிப்பீட்டுக் சுருமத்தின் இயல்பையும் பற்றித் தெளிவான விளக்கம் பெற்றுக்கொள்ளல் உங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மதிப்பீட்டினால் ஏதாவதொரு செயலின் பயனை மதிப்பீடு செய்ய முடியும். கல்வியில் அது முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் ஆசிரியர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் உள்ளவர்கள் கற்பித்தல் முறைகளினுடாக சிறந்த தியாகங்களைச் செய்யவும், அதன் விளைவாகக் கற்பித்தலுக்காகப் பயன்படுத்தப்படும் துணைச்சாதனங்களின் உதவியுடன் சுற்பவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ளவும் வழிவருத்தலினாலாகும். கற்றல் கற்பித்தல் செயல்களில் மதிப்பீடு இருவகையாக நடைபெறுகிறது அதாவது கற்பிப்பவர்களை அல்லது கற்பித்தல் செயல்களை மதிப்பீடு செய்தலும், கற்பவர்கள் அல்லது கற்றல் செயல்களையும், அதன் விளைவுகளையும் மதிப்பீடு செய்தலுமாகும். இப்பாட அலகில் கற்பிப்பவர்கள் அல்லது கற்பித்தல் பற்றியும், கற்பித்தல் பயிற்சி வழங்குபவர்களும், அவர்களின் பங்களிப்பு பற்றியும் மதிப்பீடு செய்வதன் அவசியம் கற்பித்தல் தொழில் நுட்பம், உத்தி முறைகள், ஆகியன பற்றியும் கலந்துரையாடப்படுகின்றன. விசேடமாகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் சேவையைத் தொடர்புபடுத்தி அதில் இனம் காணப்பட்டுள்ள மதிப்பீடு பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவைகளை ஆசிரியர்களாகக் கடமையாற்றும் நீங்கள் அத்தியாவசியமாக அறிந்திருத்தல் வேண்டும்

மதிப்பீடு என்பதனாற் கருதப்படுவது யாது?

மதிப்பீடு கல்விச் செயற்பாடுகளின் விளைதிறனையும், வினைத்திறனையும் அளவிடுவதற்கான ஒரு உபகரணமாகும். கற்பித்தல் செயலை விருந்தி செய்வதற்கும், தனது செயல்களைப்பற்றி ஒரு விளக்கம் பெற்றுக் கொள்வதற்கும், மற்றவர்கள் தனது செயலைப்பற்றி எத்தகைய புலக்காட்சி பெறுகிறார்கள் என்பதை அறிவதற்கும். விளைதிறனுள்ள ஒருமுகாமைத்துவ செயலமைப்பினை நடைமுறைப்படுத்துவதற்கும் மதிப்பீடு அவசியமாகும்.

குறொன்பச் (1963) குறிப்பிடுவது போல, கல்விச் செயற்பாடுகள் பற்றி ஒரு தீர்மானம் மேற்கொள்வதற்காக தகவல்கள் திரட்டுவதும், அவற்றைப் பயன்படுத்துவதும் மதிப்பீடாகும். மேரி தோர்ஜ் என்பவர் மதிப்பீடு பற்றி பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.

கல்விப் பயிற்சி வேலைத்திட்டமொன்றின் குறிப்பிட்ட துறையின் விளைதிறனையும், வினைத்திறனையும், அது தொடர்பான விளைவுகள் பற்றிய தகவல்களையும் திரட்டுவதும், பகுப்பாய்வு செய்தலும் விளக்கமளித்தலும் மதிப்பீடாகும்.

மேரி தோர்ப் (1993) சந்தர்ப்பங்களில் மதிப்பீடு, கண்காணிப்பு (Monitoring) ஆகிய இரண்டையும் ஒரேபொருளில் பயன்படுத்தியிருப்பதை காணலாம். எனினும் இவ்விரண்டுக்கும் இடையில் கானாப்படும் வேறுபாடு தொளிவானது. ஒரு வேலைத்திட்டத்தில் செயற்பாடுகள் நிகழும் வீதத்தை விமர்சனத்துக்குட்படுத்துவதே கண்காணிப்பில் நிகழ்கிறது. எனினும் இதனிலும் பார்க்க பரந்த முறையில் நோக்கங்களை அடையும் விளைதிறனை மதிப்பீடு செய்வதே மதிப்பீட்டில் இடம்பெறுகிறது. செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. நோக்கங்கள் மதிப்பிடு செய்யப்படுகின்றன. லெவிஸ் (1985) குறிப்பிடுவது போல “ஏதாவதொரு செயலை அல்லது ஒரு செயலின் பகுதியை செயற்படுத்துவதுடன் முகாமைத்துவத்தின் விளைதிறனையும். விமர்சனத்துக்குட்படுத்துவது அதனை கற்பித்தல் கண்காணிப்பாகும். ஆழமான துணைச் அவர் கற்றலுக்குட்படுத்தும் சாதனங்களையும் வழிநடத்தலை செய்முறைப்பயிற்சியாக விளக்ககியுள்ளார். கண்காணிப்பின் நோக்கம் ஏதாவதொரு செயற்பாடு எதிர்பார்க்கும் தன்மையிலிருந்து வேறுபடும் சந்தர்ப்பங்களில் அதைச் சரிப்படுத்துவதாகும். ஆனால் மதிப்பீடு என்பது செயல்முறையிலும் பார்க்க ஒரு விசேட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். அதை ஒரு தொடர்ச்சியான செயலாக இல்லாது ஒரு நிகழ்வாகக் (event) கொள்ளமுடியும்.

கணிப்பீடு செய்தல்

மேலும் பல சந்தர்ப்பங்களில் மதிப்பீடு, கணிப்பீடு செய்தல் (Assesment) ஆகிய இரு சொற்களையும் ஒரு பொருளில் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். எனினும் இதனிலும் பார்க்க முற்றாக வேறுபட்ட செயலே மதிப்பீடு என்பதனால் கருதப்படுகின்றது. ஏதாவதொரு பாடத்திட்டத்தைச் செயற்படுத்துவதுடன் இறுதியில் அது தொடர்பாக ஒரு பெறுமானம் வழங்குவதே கணிப்பில் இடம் பெறுகிறது பரீட்சைப் பெறுபேறுகளும், தொடர் மதிப்பீடுகளும் அதிகமான மதிப்பீட்டுச் செயல்கட்கு அவசியமான தகவல்களை வழங்கும் அடிப்படைகளாகும். ஏனைய அட்டவணைகளைப் போன்று இதனூடாக மேலும் தேவையான தகவல்கள் பகுப்பாய்வுகளைப் பெற்றுக் கொள்ளல் கடினமாகலாம். கணிப்பில் ஒரு மாணவன். ஓ ஆசிரியர், அல்லது ஒரு கணிப்பாளர் பெற்றுள்ள அறிவு, திறன், ப்பாங்கு யாவை எனக் கண்டறிவதே இடம்பெறுகிறது. “ருடொக்” என்னும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளது. போ லைத்திட்ட தனியாளின் சாதனை கணிப்புக்கும், கலைத்தி உட்படுத்தப்படும். செயற்பாடுகள் மதிப்பீட்டுக்கும்

கல்விச் செயல்களின் பொருத்தப்பாடு, பயன்பாடு, செயல்முறை ஆகியவற்றுட பெறுபேறுகளையும் தீர்மானித்து, அப்பெறுபேறுகட்காகப் பாடசாலை பயன்படுத்திய வளங்கள் திட்டங்கள், திட்டங்களைச் செயற்படுத்தல் தொடர்பான ஒழுங்குகள் தீரமானத்துக்கு வருதலே கல்வி மதிப்பீடு என்பதனால் கருதப்படுகிறது. பற்றியும்

பல்வேறு மேற்பார்வையாளர்களிடம் பல்வேறு மட்டத்தில் மதிப்பீடுகள், இலக்குகள், நோக்கங்கள் இருக்கலாம். எனினும் கல்விச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்பவர்களின் பிரதான நோக்கம் நிறுவனம் அவற்றின் உறுப்பினர்கள், கற்றல் கற்பித்தல் செயல்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக வழிநடத்துவதாகும்.

மதிப்பீடு ஏன் அவசியமானது?

ஏதாவதொரு கல்விச் செயற்பாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறையின் விளைவாக எதிர்பார்த்த நோக்கங்கள் எவ்வளவு தூரம் அடையப் பெற்றுள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கும், அவற்றினால் அனுமானிக்கப்பட்ட பயன்பாட்டின் பொருத்தமும், பொருத்தமின்மையும் பற்றி தீரமானிப்பதற்கும் மதிப்பீடு அவசியமாகும்.

மதிப்பீட்டினூடாக துலங்கலைப் பெற்றுக் கொள்வதற்கான பின்னணியை வெளிப்படுத்திக் கொள்வதுடன் அதனூடாக மாணவர் மையத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

இன்றும் கல்வியில் பல்வேறு முறைகளும் நடைமுறைப்படுத்தப்படுவது பரிசோதனை இயல்பிலேயாகும். ஆதலால் கற்றல் முறைகளைப் பண்பு ரீதியாக எவ்வாறு அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்? என்பதை விளங்கிக் கொள்வதற்கு அவசியமானது. கல்வியின பெறுபேறுகளைக் கல்வி பெறுபவர்கள் கண்டறிவதற்குமட்டுமல்ல, பெற்றிருக்கும் கல்வி வழங்குபவர்களின் நிறன்களையும், வேலைத்திட்டங்களின் விருத்தியையும் விளங்கிக்கொள்ள மதிப்பீடு உதவும். தனிப்பட்டவர்களின் கற்றல் நிகழும் முறையையும், கல்வி பெற்று சமுதாயக் கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவது தொடர்பான விளக்கத்தையும் பெற்றுக் கொள்ள மதிப்பீடு துணை செய்யும் அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறும் பயனுள்ள ஒரு வேலைத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான முகாமைத்துவ நுட்ப முறைகளை அறிந்து கொள்வதற்கும். பொருத்தமான ஒரு அமைப்பை விருத்தி செய்து கொள்வதற்கும் மதிப்பீடு அவசியம்.

பல்வேறு மதிப்பீட்டு முறைகள்

குறிப்பிட்ட ஒரு பங்களிப்பை மதிப்பீடு செய்வதற்கு மதிப்பீடு செய்பவரின் தேவைக்கும். வேலைத்திட்டத்தின் இயல்புக்கும் ஏற்ப பின்பற்றக் மதிப்பீட்டு முறைகள் இலகுவானதாகவோ அல்லது சிக்கலானதாகவோ அமையும், சில வேளைகளில் செயலின் சிக்கலான தன்மைக்கு ஏற்ப பின்பற்றப்படும் முறைகளிலும் சிக்கல் காணப்படலாம். கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறைகள் கீழே தரப்பட்டள்ளன.

  1. முழுமையான ஒரு வேலைத்திட்டம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதனை அளவிடுதல்.
  2. பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் பயன்பாட்டை அளவிடுதல். ஒரு வேலைத்திட்டம் உள்ளடக்க வேண்டிய அமிசங்கள் யாவை என .
  3. விளங்கிக்கொள்ளல்:
  4. கல்வி பெறுபவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியளிப்பவர்கள், முகாமையாளர்கள் ஆகிய பலதிறப்பட்ட பங்கேற்பவர்களிடையே காணப்படும் பல்வேறு
  5. புலககாட்சிகளையும் அறிந்து கொள்ளல், ஒரே சேவையைப் பயன்பெறக் கூடிய முறையில் பல்வேறு வழிகளில் எவ்வாறு சமர்ப்பிக்கலாம் என்பதை விளங்கிக்கொள்ளல்.
  6. ஒரு வேலைத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படாத விளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதைக் கண்டறிதல், ஒரு வேலைத்திட்டத்தின் நோக்கத்தை அடைய மேற்கொள்ளும் பின்னூட்டல் செயல்களை மதிப்பிடல். பலவேறு சந்தர்ப்பங்களில் பலதிறப்பட்ட கல்வி பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்பு யாது என்பதை விளங்கிக் கொள்ளல். ஒரு வேலைத்திட்டத்தின் அல்லது ஒரு சேவையின் பெறுபேறுகளின் மீது தாக்கம் விளைவிக்கும் சாதனங்களை விளங்கிக் கொள்ளல்.

இடையிட்ட மதிப்பீடும் (Formative) இறுதி மதிப்பீடும் (Summative)

மதிப்பீட்டாளர்கள் இடையிட்ட மதிப்பீடு, இறுதி மதிப்பீடு ஆகிய இரு பிரதான மதிப்பீட்டு முறைகளையும் கைக்கொள்கின்றனர். இடையிட்ட மதிப்பீடு என்பதனாற் கருதப்படுவது ஏதாவது ஒரு பாடத்திட்டத்தை அல்லது ஒரு செயற்திட்டத்தை செயற்படுத்தும் போதே மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதாகும். ஆசிரியரின் கற்பித்தல் செயலைக் கவனத்திற் கொண்டால் அவரின் கற்பித்தலை வழிநடத்துவதற்காக இடையிட்ட மதிப்பீட்டைப் பயன்படுத்தலாம். ஆசிரியரின் திட்டமிட்டபடி பாடத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப கற்பிக்கின்றாரா என்பதை இதனூடாக அறிந்து கொள்ள முடியும் இதற்கு சிக்கலான மதிப்பீட்டு முறைகளையோ அல்லது பரீட்சை முறைகளையோ பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆசிரியரின் கற்பித்தல் சந்தர்ப்பமொன்றை அவதானித்தல் குறுகிய எழுத்துப் பரீட்சையை மாணவர்கட்குக் கொடுத்தல் வீட்டு வேைைலகள் ஒப்படைகளை அவதானித்தல், வாய்மொழி மூல வினாக்களை வினவ போன்ற முறைகளினூடாக இடையீட்ட மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். நாம் எமது செயல்களையும்/அவர்கள் அவர்களது செயல்களையும் எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள். அதன் பின் நாம் என்ன செய்கிறோம் போன்ற விளாக்களுக்கு விடை பெற்றுக் கொள்ள இம்மதிப்பீட்டில் அவசியமாகும். இது ஒரு வேலைத்திட்டத்தின் பயன்பாட்டை அளவிடுவதல்ல ஏதாவது மாற்றம் அவசியமானால் அம்மாற்றத்தை அறிந்து கொள்ளும் ஒரு செயலாகும்.

இறுதி மதிப்பீடு ஏதாவதொரு வேலைத்திட்டத்தை அல்லது செயற்றிட்டத்தைச் செயற்படுத்தி இறுதியில் அதன் பயன்பாட்டை மதிப்பிடுவதாகும். அது சில வேளை கலைத்திட்டத்தை அல்லது ஒரு பகுதியை முடித்ததன் பின் இறுதியில் மேற்கொள்ளப்படுவதாகும். நோக்கங்கள் நிறைவேறுமா, பயனுள்ள முறையில் செயல்படுத்தப்படுகிறதா, அதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திச் செல்வது பொருத்தமானதா, என்னும் வினாக்களுக்கு விடை பெற்றுக்கொள்ள வேண்டியேற்படும். வருட இறுதியில் நடாத்தப்படும் பாடசாலைப் பரீட்சையைத் இறுதி மதிப்பீட்டுக்கு உதாரணமாகக் கூறலாம். இடையிட்ட மதிப்பீடு, இறுதி மதிப்பீடு ஆகிய இரண்டினதும் பண்புகளையும், பங்களிப்புகளையும் பற்றி கீழ்வரும் அட்டவணையிலுள்ள குறிப்பிலிருந்து உங்களுக்கு தெளிவான ஒரு விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இறுதி மதிப்பீடு

  • வேலைத்திட்டத்தின் மேற்கொள்ளப்படுவதாகும்.
  • நிபுணத்துவ வெளிமதிப்பீட்டாளர்களால் மேற்கொள்ளப்படுவது

இடையிட்ட மதிப்பீடு

  • வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் போதே மேற்கொள்ளப்படுவதாகும்
  • மேலதிக வளங்கள் தேவைப்படலாம்
  • ஒருசுயமதிப்பீடு/செயலில் மேற்கொள்ளப்படுவது.
  • ரூபா ஆயிரக்கணக்குக்குப் பதிலாக நூற்றுக் கணக்கில் மட்டும் செல்ல ஏற்படும்.
  • பரந்த மட்டத்திலான கற்கைகளும் புள்ளி விரிவான புள்ளி விபரங்கள் அவசியமில்லை.
  • விபரங்களும், பகுப்பாய்வு நுட்ப முறைகளும் அவசியமாகலாம்
  • அறிக்கை சமர்ப்பித்தல் அவசியமாகலாம்.
  • தேசிய மட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்தல் பிரதேச/பாடசாலை அவசியமாகலmb
  • ஒழுங்கமைப்பில் தீர்மாளம் மேற்கொள்ள்ளவும்,
  • செயற்படுத்துவநிலுள்ள முறைகளைத் தெரிவு செய்து கொள்வதற்கு நேரம் செலவழித்தல் அவசியம்.
  • இளங்காணவும் வழிகாட்டலாம்.

90 வேலைத்திட்டத்தின் நினாட பயன்பாடு பற்றிய வழங்கவேண்டியேற்படலாம் காளப் தரவுகளை மட்டத்தில் குறுகியகால பயன்பாட்டுக்கு வழிநடத்தனும் செயல் அவசியமான சாதனைக்கு பொருத்தமான புள்ளி விபரங்களின் மீது நம்பிக்கை வைத்தலும் அவசியம் அட்டவணை – திரட்டிய மதிப்பீட்டினதும், சம்பிரதாய மதிப்பீட்டினதும் பணிபுகள்

எதை மதிப்பீடு செய்ய வேண்டும்?

எதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்னும் விளாவுக்கு கல்வித் துறையில் மட்டுமல்ல, ஏனைய துறைகளிலும் அல்லது வேலைத்திட்டங்களிலும் மதிப்பீடு பற்றிக் கற்பவர் பெற்றுக்கொள்ளல் இதற்கு அத்தியாவசியம். விடை சுருக்கமாக மதிப்பீடு செய்வது நோக்கங்களையாகும் என ஒரு தெளிவான விடையை அளிக்கலாம். வேறு சொற்களில் குறிப்பிடுவதானால் மதிப்பீட்டுக்குட்படுத்துவது செயற்பாட்டினால் அல்லது வேலைத்திட்டத்தினால் அல்லது செயற்றிட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளையாகும். எதிர்பார்க்கும் பெறுபேற்றினை அல்லது பெறுபேறுகளை ஏற்கனவே இனங்கண்டிருத்தலும் வெளிப்படுத்தியிருத்தலும் நோக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு அவசியமாகும். நோக்கங்களின் முக்கிய பண்பான நோக்கங்களை அளவிட முடியுமாக இருத்தல், நோக்கங்களை அடையக கூடியதாக இருத்தல், ஆகியன வெற்றிகரமான ஒரு மதிப்பீட்டுக்கு அவசியம் திருப்தியான ஒரு மதிப்பீட்டுக்கு எமது சகல காரியங்களுக்கும் போல கல்லிச் செயல்முறைகட்கும் விசேடமாக பாடசாலைகட்கும் நோக்கங்கள் இருத்தல் வேண்டும். எமது நாட்டின் பாட்சாலைகள் தத்தமது நிறுவனத்துக்கான தெளிவான, சிக்கலற்ற நோக்கங்களை இளம் கண்டு கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் அவதானத்திற் கொள்ளவேண்டும். பாடசாலைக்கு அல்லது கற்பித்தல் வேலைத்திட்டத்துக்கு பொருத்தமான நோக்கங்களை இளங்காணும் போதும், மதிப்பீட்டுச் செயல்களின் போதும் கீழ்வரும் வினாக்கட்கு விடை பெற்றுக் கொள்ளல் அவசியமாகும்.

நோக்கத்தை/நோக்கங்களை இனங்காண வேண்டிய அவசியம் யாது? 2.

இளங்கண்ட நோக்கங்களை எவ்வாறு அடையலாம்?

  1. நோக்கங்களை எப்போது அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது? ஈடுபடுபவர்களால் எத்தகைய மனிதசிரமம் அல்லது செலவு ஏற்படும்?
  2. நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்தப்படும் பிரமாணங்கள் யாவை? அளவிடும் போது தேவைப்படும் ஒப்பீட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அடிப்படைத் தரவுகள் யாவை?
  3. ஆசிரியர்களாகிய உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கலைத்திட்டத்தை அல்லது கற்றல்.

கற்பித்தல் செயல்களை மதிப்பீடு செய்யும்போது ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ள நோக்கங்கள் அவசியமாகின்றன. நோக்கங்களே அளவிடப்படுகின்றன. ஆதலால் எத்தகைய வேலைத்திட்டத்துக்கும் நோக்கங்கள் இருத்தல் வேண்டும். வேலைத்திட்டதின் அல்லது கற்பித்தலின் இறுதியில் நோக்கங்களே அளவிடப்படுகின்றன. ஆதலால் சகல வேலைத்திட்டங்களையும் ஆரம்பம் செய்வதற்கு முன் நோக்கங்களைத் தெளிவாக இனங்கண்டு கொண்டிருத்தல் வேண்டும் நோக்கங்கள் இன்றிச் செயற்படுதல் வெற்றியின் எல்லைக்கோட்டை அறியாது ஓடுவதற்குச் சமவாகும்.

நோக்கங்களினூடாக கல்விச் செயல்களை மதிப்பீடு செய்வது பற்றி விமர்சனங்கள் இல்லாமவில்லை.

1. கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான செயலாகும். அத்துடன் கற்றல் உடனடியாக இறுதிப் பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியாத தொழிலாதலால் நோக்கங்களினூடாக கல்வியை அளவிட முடியுமா? என சிலர் தர்க்கிக்கிறார்கள்.

2. தகவல்களைக் கிரகித்தல் போன்றவற்றை மதிப்பீடு செய்ய முடியுமாக இருந்தாலும் கல்வியினால் எதிர்பார்க்கப்படும் சில சிக்கலான திறன்களை (விளங்கிக்கொள்ளல் போன்றவைகள்) மதிப்பீடு செய்தல் நோக்கங்களை மதிப்பீடு செய்வதனூடாக முடியாது என்பது மற்றொரு தர்க்கமாகும்.

3. தெளிவாக வெளியிடப்படாத கல்வி வேலைத்திட்டங்களின் பெறுபேறுகள நோக்கங்களை மதிப்பீடு செய்யும் படிவத்தின் மூலம் அளவிட முடியாது என் மூன்றாவது தர்க்கமாகும்.

4. நோக்கங்களினூடாக வேலைத்திட்டத்தின் வெற்றியை அல்லது தோல்வியை மதிப்பிட்டாலும் வேலைத்திட்டம் எவ்வாறு வெற்றியை அல்லது தோல்வியை அடைந்தது என்பதைக் கண்டறிவது கடினமாகும். என்பது நான்காவது தர்க்கமாகும்.

கற்றல்-கற்பித்தல் செயலை மதிப்பீடு செய்தல்

மேற்குறிப்பிட்ட விமர்சனங்கள் காணப்பட்டாலும் பாடவிதான மதிப்பீடு பற்றி கருத்துக்களைச் சமர்ப்பித்துள்ள சிப்மன் (1979) கற்றல்-கற்பித்தல் செயல்களையும், கல்வி வழங்கள் செயலையும் பற்றி விளக்கம் அளிப்பதற்கு நோக்கங்களினூடாகப் பொருள் கொள்வதே மிகவும் சிறந்த முறையாகும் என விவாதிக்கிறார்.

தற்போது இலங்கையில் செயற்படுத்தப்படும் ஆசிரியர் சேவைச் சட்டக் கோவையில் எங்களது பாடசாலை அமைப்பில் பணிபுகளும், பயனும், வினைத்திறனுமுள்ள கல்வியை உருவாக்குவதற்கான பிரதான வழி ஆசிரியரின் வகுப்பறைச் செயல்கள் ஆகும் என இனங்காணப்பட்டிருக்கிறது. அத்துடன் அச் செயல்களைப் பல்வேறு வழிகளில் மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதன் மூலம் ஆசிரியர் பரம்பரையில் ஒரு தொழில்சார் விருத்தியை ஏற்படுத்த முடியும் எனவும் ஆழ்ந்த நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் பரவியுள்ள சுமார் 10,000 க்கும் கூடிய எண்ணிக்கையான பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் 200,000 எண்ணிக்கைக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு உயர்வு பெறுவதற்கான நகைமைகளைப் பெற்றுக்கொள்ள பல்வேறுட்ட மதிப்பீடுகட்கு உட்படுதல் வேண்டும் என ஆசிரியர் சட்டக்கோவையில் விதந்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆசிரியர் சேவை 2ஆம் வகுப்பு 1ஆம் தரத்திலிருந்து 1ஆம் வகுப்புக்கு உயர்வு வழங்கப்படுவதற்கு முன் ஆசிரியரின் தொழிற் திறன் தொடர்பான மதிப்பீடுகள் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் பற்றிய விதிகள் சட்டக் கோவை 7:1 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்விதிகள் கீழே தரப்பட்டுள்ளன. 1. பாட இணைப்பாக்கச் செயற்பாடுகளில் ஆசிரியர் ஈடுபாடு கொண்டுள்ள அளவு.

மாணவர் தொடர்பு மாணவர் நலன்புரிச் செயல்கள் என்பன பற்றி ஆசிரியர் நிறைவேற்றும் பணிகள்.

  • மாணவ ஆலோசகராக ஆசிரியரின் செயற்பாடு.
  • ஆசிரியர் குழுவுடனும், பெற்றோர்களுடனும் தொடர்பு
  • வருப்பறைக் கற்பித்தல் பற்றிய மதிப்பீடு.
  • ஆசிரியர் தனக்குரித்தான லீவில் பெற்றுக் கொள்ளாத லீவு நாட்கள்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீட்டுக்கான விதிகளில் விதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாட இணைப்பாக்கச் செயல்களும், வகுப்பறைக் கற்பித்தல் செயல்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததவையாகக் கருதமுடியும் கற்றல் கற்பித்தல் அபிவிருத்திக்குப் பிரதான அரத்தளமாக அமைவது மதிப்பீடாகும் என்பதைக் கல்வி. உயர்கல்வி அமைச்சு ஏற்று இந்த விதிகளை அறிமுகம் செய்துள்ளது. மதிப்பீட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பயன் கருதி இரண்டு மதிப்பீட்டுப் படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

1. பாட இணைப்பாக்கச் செயல்களுக்கான மதிப்பீட்டுப் படிவம்.

2. கற்பித்தல் செயல்களுக்கான மதிப்பீட்டுப் படிவம்:

3. தொழில்சார் விமர்சனத்தைப் பல கட்டங்களாக நிகழ்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

4. பாடசாலைக்கு வெளியேயுள்ள மேற்பார்வையாளர்களால் மேற்கொள்ளப்படும் மதிப்பீடு,

5. பாடசாலை அதிபரின் மதிப்பீடு.

6. ஆசிரியரிஆசிரியையின் சுய மதிப்பீடு,

வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் படிவம் பின்வரும் 14 அம்சங்களையும் கொண்டதாக இருக்கும். அவையாவன

பாடம் திட்டமிடல்.

பாடப் பிரவேசம்.

பாட அபிவிருத்தி

பயனுள்ள முறையில் கரும்பலகையைப் பாவித்தல்

உபகரணங்களையும், துணைச் சாதனங்களையும் பாவித்தல்.

பயன்படுத்தப்படும் கற்பித்ததல் முறை.

பயன்படுத்ததப்படும் கற்பித்தல் முறையில் மாணவர் மையக் கல்விக்குரிய இடம்,

பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறையில் வினாக்களின் பிரயோகம்.

ஊக்கல் நுட்பமுறைகள்

விசேட உதவி தேவைப்படும் பிள்ளைகட்காகப் பயன்படுத்திய நுட்பமுறைகள்.

பாடத்தின் முழுமையான கணிப்பு

மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்வதற்காக மேற்கொண்ட வழிமுறைகள்.

ஆசிரியர் வெளிப்படுத்திய குணப் பண்புகள்.

கற்றலின் விருத்திக்காக உபயோகித்த முன்னேற்றப் படிமுறைகள்.

சுய மதிப்பீடும், தொழில்சார் பொறுப்பும்

மதிப்பீட்டினால் வேலைத்திட்டத்தின் வெற்றியை அளவிடுவதனூடாக அவ் வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும் என்பதை மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலினால் நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள். ஆசிரியர்களின் பங்களிப்பை மதிப்பீடு செய்வதனூடாக அவர்களின் தொழில்சார் விருத்திக்கு வழிகாட்டவும், அவர்களிடம் ஊக்கல் ஏற்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றமடையும் தேவைகட்கு ஏற்றவிதமாக ஆசிரியரின் பங்களிப்பை உருவமைத்தும் கொள்வதற்கு அவரிடம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வ மதிப்பீட்டினால் எதிர்பார்க்கப்படும் விளைவு வெளியார் ஆகும். ஒருவரினால் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டிலும் பார்க்க தானே தனது செயல்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்திக் கொள்வதன் மூலம் தொழில்சார் விருத்தியை ஏற்படுத்திக்கொள்ளச் செயற்பட்டால் அதுவே மிகச் சிறந்த மதிப்பீட்டு முறையாக அமையும். தனது செயல்களைத் தானே மதிப்பீட்டுக்கு உட்படுத்திக் கொள்ளல் “சுய மதிப்பீடு” என அழைக்கப்படும் வெளியார் ஒருவரினால் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டிலும் பார்க்க சுய மதிப்பீடு மூலம் ஆசிரியரிடம் எதிரபார்த்த அல்லது கல்விச் செயலினால் எதிர்பார்த்த பொறுப்புக்கள் பற்றிய எண்ணக்கருவுக்கு வெற்றிகரமாக விளக்கம் கொடுக்கலாம். Accountability என்னும் ஆங்கிலச் சொல்லினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சொல்லான “வகைகூறல்” என்பதனால் கருதப்படுவது தான் செய்யும் செயல்களுக்கு சம்பளம் வழங்கும் திணைக்களத்துக்கும், வரி செலுத்தும் மக்களுக்கும், அம்மக்களின் பிரதிநிதிகளான அரசியல் தலைவர்கட்கும் தனது தொழில் தொடர்பான நண்பர்களுக்கும் தகவல்கள் வழங்குவதற்கு கல்வியில் ஈடுபட்டுள்ளவர்கள்

கடமைப்பட்டுள்ளார்கள். தனது மேலதிகாரிகளான திணைக்கள் அதிகாரிகளுக்கும், அதிபருக்கும், அரசியல் தலைவர்கட்கும், மட்டுமல்ல தான் சேவை செய்வதற்காகக் கடமைப்பட்டுள்ள பெற்றோர்கட்கும். மாணவர்கட்கும் ஆசிரியர்கள் வகைகூறக் கடமைப்பட்டுள்ளார்கள். தனது கடமைகள், பொறுப்புக்கள் யாவை என்பதைக் கற்றறிந்து கொள்வதற்கும், அவற்றை எவ்விதக் குறைபாடுகளின்றி நிறைவேற்றுவதற்கும், தனது பொறுப்பின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கும் தேவையான விளக்கத்தை வகைகூறல் என்ற சொல்லின் எண்ணக்கரு உட்கொண்டுள்ளது. அதிகமான நாடுகளில் ஆசிரியரின் தொழில்சார் விருத்திக்கும், நிறுவன விருத்திக்கும் சுய மதிப்பீடு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. வகைசொல்லலும் கய மதிப்பீடும் தொழில்சார் விருத்தியில் மிக நெருங்கிய தொடர்புடையன. இவ்விரண்டில் ஒன்றுமட்டும் அவசியமானது என ஒருவருக்கு விவாதிக்க முடியாது என “தெடோல்” என்னும் எழுத்தாளர் இதன் முக்கியகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.

சுய மதிப்பீடு, வகைகூறல், தொழில்சார் விருத்தி ஆகிய மூன்றும் சம கோணங்களினால் ஆன முக்கோணத்துக்குச் சமமானது இம் மூன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தீங்கு ஏற்படாத முறையில் ஒன்றைப் பிரித்தெடுக்க முடியாது. வேறு சொற்களில் கூறுவதானால் நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வகைகூறல், சுயமதிப்பீடு ஆகிய இரண்டுடனும் வாழவேண்டியுள்ளது.

சுய மதிப்பீட்டுக்கான வழிகாட்டல் படிவத்தை ஆம்/இல்லை என்று வினாக்கொத்துக்கு விடையளிக்கும் இலகுவான முறையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட சில அளவு கோல்களைப் பயன்படுத்தி முன்னேற்றத்தை அளவிடும் சிக்கலான பரிசோதனை முறை வரை பலவிதமாக ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top