சிறுபான்மையினரின் வகைகள்

பல்வகைப்பட்ட அரஸ்திரேலியாவின் மொழிப்பிரச்சிளையளும் கொள்கையும்

அறிமுகம்

“பல்லினச் சமூகங்களிற் கல்லி” சனத்தொகையைக்கொண்ட பல்வகைச் சமூகங்களில் தோன்றக பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடினோம். இனத்துவம் என்பது மக்கள் குழக்களின் மொழியுடனும் கலாசாரத்துடலும் பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ள ஒரு விடயம் என்பதையும் அதனால் கல்வியை வழங்கும் போது மொழி ஒரு சிக்கலான பிரச்சினையைத் தோற்றுவிக்கின்ற முறையையும் நாம் பார்ப்போம்

1 கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களினால் கல்வியில் மொழி பற்றிய பிரச்சினை மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்றிருக்காத அளவுக்கு அடத்த இரண்டு மூன்று பரம்பரைகளாக உலகம் முழுவதிலும் ஏற்பட்ட சனத்தொகைப் பெயர்வு காரணமாகவும் (சில நாடுகளில் கணிசமான அளவு சிறுபான்மை சமூகத்தவர் இருந்த போதிலும் அவற்றின் மொழிப் பிரக்கினை மறைந்திருந்தது) அண்மையில் ஏற்பட்ட சனத்தொகைப் பெயர்வு காரணமாகவும் மொழிப் பிரச்சினை தோன்றியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

உலகம் முழுவதிலும் சிறுபானைமயினர் மீதிருந்த தேசிய மனப்பாங்கு கணிசமான அளவு: மாற்றமடைதல், அண்மைக் காலத்திலிருந்து, சிறுபான்மைச் சமூகத்தவரை வெளிப்படையாகவும் அனுதாபத்தோடும் பார்க்கும் மனப்பாங்கு வளர்ச்சியடைவதற்குத் தூண்டுதன்களிருந்த சரவதேச கருத்தியல் ஒன்று காணப்படுகின்றதர் எள சேரச்சில் (1986) மடுத்துக் கட்டுகிறார்.

சிறுபாணிமையினரின் “அபிவிருத்தி” பற்றிய சமகாலப் பார்வை தலைக்குரிய வருமானத்துக்கு மேலதிகமாக சமூக நலன்புரி நிர்ணய அளவீடுகளையும் சேர்த்துள்ளது. மன்காஷ் (1975) இந்த நிர்யண அளவீடுகளில் செல்வத்தை சமனாகப் பங்கிடுதல், சிறந்த பாதுகாப்பும் நலனும், சட்ட மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படல், சட்டமும் சமாதானமும் கல்வியின் மட்டமும் அதன் பண்புத்தரமும், சுற்றாடலின் பண்புத்தரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ள அளவு, உணவும் மற்றும் தேவைகளும் போதுமானளவு வழங்கப்பட்டிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்குகிறார். ஒருவருடைய மொழிசார் உரிமைகள் பாதுகாக்கப்படலும் சமூக நலன்புரி நிர்ணய அளவீடுகளில் ஒன்றாகும்.

பலநாடுகளில் (ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) சிறுபான்மை பிள்ளைகளின் கல்வி அடைவு மட்டம் பற்றிச் செய்யப்பட்ட ஆய்வுகள் ஒரு மொழிப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் ஊடகம் அவர்களிடம் காணப்படும் கற்கும் திறமையையும் இப்பிள்னைகளின் முழுமையான வளர்ச்சியையும் தடை செய்யும் ஒரு முக்கிய காரணி என்பதை வெளிப்படுத்துகின்றன. சிறுபான்மைப் பிள்ளைகளுக்கு குறைவான கல்வியை வழங்கும் நற்போதைய பாங்கில் நெடுங்காலமாக சமூக பொருளாதார செலவு மிகவும் அதிகமானதென்பதும் எடுத்துக்காட்டப்படுகின்றது.

ஐரோப்பிய பொருளாதார் சமூகம் (EEC), தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம், (ASEAN), பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்ஆசியச் சங்கம் (SAARC) முதலிய நாடுகள் பிராந்தியத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதால் புதிதாக இடம்பெயர்ந்தோர்களில் விருந்தினர் ஊழியர்களை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த விருந்தினர் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் கட்டுப்படுத்தக் கூடிய மட்டத்திலுள்ளது. (அவர்கள் சிற்சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அவர்களுக்குத் தமது உரிமைகளைக் கேட்பதற்கான வாய்ப்பு இல்லை) எனினும் பின்னொரு காலத்தில் அவர்களது மொழிசார்ந்த உரிமைகளும் அவர்களது பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான பிரச்சினைகளும் தோன்ற இடமுண்டு. சிறுபான்மை சமூகத்தவரின் வாழ்க்கை, தனித்தன்மை என்பவற்றை பாதுகாப்பதற்கும் தனித்தன்மையை விருத்திசெய்வதற்கும் தேவையான உதவிகளை

அரசாங்கம் செய்யவேண்டியுள்ளது. விசேடமாக முன்னர் குடியேற்றங்களாக இருந்து தமது சுதந்திரத்தை பெற்றுக் கொனிட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பல மொழிகள் காணப்படுவதால் அவர்களது தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இரு நிலைமைகளில் மொழிசார்ந்த பல்வகைத் நன்மையைப் பாதுகாத்துக்கொள்ளும் சவால்களுக்கு அந்நாடுகள் முகங்கொடுத்துள்ளன. ஒரு பக்கத்தில் இந்நாடுகளின் ஒழுக்கவியல் காரணிகளுக்காக சிறுபான்மை மட்டங்களில் மொழிசார் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகின்றது. இரண்டாவது தேசிய மக்கள் வாழ்க்கைக்கும் கலாசார பல்வகைத்மொழிசார். உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதால் சிறுபான்மைக்குழுக்களுக்கு ஓரளவு கல்லியை வழங்க முடிகிறது அத்தோடு தேசிய மொழியைக் கற்பிப்பதற்கும் மிகச்சிறு அளவிலாவது தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் மொழிகளைக் கற்பித்தல் பற்றிய நிர்மாளங்களையும் எடுக்க வேண்டும்.

சிறுபான்மையினரின் வகைகள்

நாம் பிரதானமாக மூன்று சிறுபான்மைச் சமுகத்தலர் பற்றி அறிந்து கொள்ள முடியும் அள்ளயாலன

(1) saga udash (Indigenous Peoples)

(11) உறுதிப்படுத்தப்பட்ட சிறுபான்மைச் சமூகத்கவர் (Establelished Minorities)

(III) той) (New Minorities)

முதலாவது வகையான சுதேச மக்கள் தமது நாடுகளிலே நீண்டகாலமாகத் தமி தாபித்துக்கொண்ட குழுக்களாகும். சாமியர்கள் (லெப் இனத்தார்) மயோரி (நியுசிலாந்த) இனியுட் (எஸ்கிமோவர்) அமெரிக்க இந்தியர்களும் பழங்குடிகளும் (அவுஸ்ரேலியா) ஆகியோர் இவ்வகையைச் சேர்ந்தோர் ஆவர். சுதேச மக்கள் இருக்கும் நாடுகளில் சமூகத்தினால் இனவாத மனப்பாங்குகள் மென்மேலும் புறக்கணிக்கப்படுவதைக் காணமுடிகிறது. முன்பைவிடக் கலப்பு உரிமைகளைக் கொண்ட குழுக்கள் சுதேச சிறு இனக்குழுக்ளோடு ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள முயல்வது தென்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட சிறுபான்மைச் சமூகத்தவர் என்ற பிரிவிற்குள் ஸ்பானிய கெற்றலன்கள் (catalands) ஐக்கிய அமெரிக்காவின் ஆகேடிய பிரான்சிய (Acadian Frech) இனத்தவர்கள், பிரான்சின் பிரெடன் (Bretens) இனத்தவர்களும் சுனேடிய பிரான்சிய மொழிபேசுவோர் ஆகியோர் அடங்குவர்

புதிய சிறு சனக்குழுக்கள் அண்மையில் நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் ஆவர் இந்திய, சீன நாடுகளிலிருந்து தப்பியோடும் மக்கள் “வள்ள” (Boat) மக்கள் போன்ற அகதிகள் தமது புதிய வீடுகளில் முழுமையான நிரந்தரமானவர்கள் என்ற அந்தஸ்து இல்லாமல் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள், பிரித்தானிய பொதுநலவாயம் ஐக்கிய நாடுகள் அமையம், அல்லது ஐரோப்பிய பொருளாதார சமூகம் போன்ற அமைப்புக்களில் சேவை செய்யும் வெளிநாட்டினர் போன்ற இடம் பெயர்ந்தவர்கள் இவ்வகைக்குள் அடங்குவர்.

தேசியமட்ட மொழிக்கொள்கை

தேசிய மட்டத்திலான மொழிக்கொள்கை என்பதன் மூலம் கருதப்படுவது யாது என்பதை இப்போது களனிப்போம்.

நாம் மேலே குறிப்பிட்ட சிறுபான்மைச் சமூகத்தவரின் உரிமைகள் பற்றி ஐக்கிய நாடுகளின் வெளியீடு சிறுபான்மையினர் தொடர்பாகச் சிற்சில இழிவளவு உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமென்று நாடுகளுக்கு விதித்திருக்கிறது. இவ்வுரிமைகளுக்குள் இக்குழுக்களுக்கு மக்கள் வாழ்க்கையில் பங்குபரிறுவதை இலகுவாக்கும் மொழிசார் உரிமையும் அடங்குகின்றது. வெரென்னஸ் (1997) இந்த ஐக்கிய நாடுகளின் சுற்று மேலே குறிப்பிட்ட உரிமைகளை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட அரசுகள் அரச சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றோ சிறுபான்மைச் சமூகத்தவரின் தனித்துவத்தைத் தொடர்ந்தும் பேணுவதற்குக் குறிப்பிட்ட சேவைகளை வழங்கவேண்டுமென்றோ விதிக்கவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றார். முதலாவது வாசகம் அரசுகளினால் அவசியம் செயற்படுத்தப்ப வேண்டிய விசேட செயற்பாடுகள் எவற்றையும் குறிப்பிடவில்லை. அது வீரிவான வழிகாட்டலை மட்டுமே செய்கின்றது

மொழிசார் சிறுபாலையர் சமூகத்தவர் தொடர்ந்திருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களது தனித்துவத்தின் அத்தியாவசிய அங்கங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சட்ட அல்லது வேறு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசுகளுக்கு ஒரு பொறுப்புண்டு சிறுபான்மை மொழியின் விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தக் கட்டளைச் சட்டங்கள் மற்றும் வேறு நடவடிக்கைகளை எடுத்தல் என்பன் இதிலடங்கும். என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எவ்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் பலவாகும் அவையாவன.

நாட்டிலே நிலவுமிளிற விசேட் நிலைமைகளும் மொழிசார் சிறுபான்மைச் சமூகத்தயரின் தொடர்ச்சியைப் பாதிக்கும் அச்சுறுத்தலும் அவர்களது மொழி விருத்தியைப் பாதிக்கும் காரணிகளும் ஆகும். பல சமூகங்கள் தமது முழுத் தேசிய இளந்துக்கும் அந்தத்த சிறுபான்மைச் சமூகத்தாருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தமக்கே உரிய மொழிக்கொள்கையை விருத்தி செய்து கெள் முயல்லது இதனாலாரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top