சிகிச்சைமுறை மேற்பார்வை (Clinical Supervision)

நோயாளிக்குப் பரிகாரம் செய்தல் இரண்டாம் கட்டமாகும். அப்பரிகாரத்தினால் தனக்கு சுகம் ஏற்படும் என்ற நம்பிக்கை நோயாளியிடம் ஏற்பட்டிருப்பதுடன் வைத்தியரும் தான் வழங்கிய பரிகாரம் நோயாளியைச் சரியாக இனங்கண்டு மேற்கொள்ளப்பட்டதால் நோயாளி குணமடைவார் எனத் திருப்தியடைவார். குறிக்கப்பட்ட மருந்தைப் பாவித்து முடிந்தவுடன் மீண்டும் சமூகமளித்து நோயின் குணத்தைப் பற்றி அறிவிக்குமாறு அதிகமான வைத்தியர்கள் நோயாளிகளிடம் கேட்டுக்கொள்வர். இது தனது பரிகாரம் வெற்றியளித்துள்ளதா, நோயாளி திருப்தியடைந்துள்ளாரா என்பதை மதிப்பீடு செய்யும் ஒரு கட்டமாகும். நோயாளி குறிப்பிட்ட பரிகாரத்தினால் குணமடையவில்லை எனின் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து மீண்டும் பரிகாரம் மேற்கொள்ளல் இக்கட்டத்தில் நிகழ்கிறது.

மேற்கூறிய மூன்று கட்டங்களுக்குச் சமமாக சிகிச்சைமுறை மேற்பார்வை செயற்படுத்தப்படல் வேண்டும். அம் மூன்று கட்டங்களும் கீழே தரப்பட்டுள்ளன. அவையாவன

1. முன் மேற்பார்வைக் கட்டம் (Pre-Supervisory Stage)

2. மேற்பார்வைக் கட்டம் (Supervisory Stage)

3. பின் மேற்பார்வைக் கட்டம் (Post-Supervisory Stage) என்பனவாகும்.

2.5.1 முன்மேற்பார்வைக் கட்டம்

தற்போதைய மேற்பார்வைச் செயன்முறையில் இக்கட்டம் அவ்வளவு தாரம் இடம்பெறாவிட்டாலும் பயனுள்ள மேற்பார்வைக்கு அத்தியாவசியமாக நிறைவேற்றவேண்டிய ஒரு கட்டமாகும். வைத்தியருக்கும், நோயாளிக்குமிடையில் நிகழும் கலந்துரையாடலினால் இருவருக்குமிடையில் அன்னியோன்னிய நம்பிக்கை ஏற்படுவதைப் போன்ற ஒரு சமயான செயல் இக்கட்டத்தில் நிகழ்கிறது. மேற்பார்வையாளருக்கும், மேற்பார்வைக்குட்படுபவருக்கும் இடையில் ஏற்படும் நம்பிக்கை மேற்பார்வையைத் திறந்த மனதுடனும், சுதந்திரமாகவும் நடாத்த வழிவகுக்கும். மேற்பார்வைக்குட்படுபவர். மேற்பார்வையாளரை ஏற்றுக்கொள்வதும், மேற்பார்வையாளர் மேற்பார்வைக்குட்படுபவரை ஏற்றுக்கொள்வதும் இங்கு நிகழ்கிறது. அத்துடன் மேற்பார்வையை ஆரம்பிப்பதற்கு முன் தேவையான ஆயத்தங்களைச் செய்துகொள்ள

மேற்பார்வையாளருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மேற்பார்வைக்குட்படுபவர். மேற்பார்வைச் சந்தர்ப்பங்கள், ற்ேபார்வை செய்யப்படும் துறை ஆகியவற்றுக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள் மாற்றமடையும். மேற்பார்வைக்குட்படுபவர்களும் அத்துடன் ஆரம்ப ஆயத்தங்களைச் செய்து கொள்வதுடன் தன்னம்பிக்கையுடலும், சபைக் கூச்சமின்றியும் மேற்பார்வையை எதிர்கொள்ள முடியும்.

மேற்பார்வைக் கட்டம்

இது மேற்பார்வையில் ஈடுபடும் கட்டமாகும். இச்சந்தர்ப்பத்தில் இருவரினதும் அன்னியோன்ய செயற்பாடாக மேற்பார்வை நிகழ்கிறது. மேற்பார்வை சுமுகமாகவும், இருவரும் சமமானவர்கள் என்ற உணர்வுடனும், மேற்பார்வைச் செயலினூடாக இருவரினதும் செயல்களே மதிப்பீடு செய்யப்படுகின்றன என்ற முன்தீரமானத்துடனும் நிகழவேண்டும். மேற்பர்வையாளர் மாதிரிப் பாடமொன்றை நடாத்தி வெற்றிகரமான பாடமொன்றின் பண்புகளைச் செயலினூடாக விளங்கவைத்தல் சிகிச்சை மேற்பார்வையின் முக்கிய அமிசமாகக் கருதப்படுகிறது.

பின் மேற்பார்வைக் கட்டம்

மேற்பார்வையின் பின் நிகழும் பின்னூட்டல் செயலுடன் மேற்பார்வையை உறுதிப்படுத்திக் கொள்ளல் இக்கட்டத்தில் நடைபெறுகிறது. இருவருக்குமிடையில் விசேடமாக மேற்பார்வையைப் பற்றி கருத்துக்கள் காண்பதற்காக இணக்கம் கொள்ளப்படுகின்றன. மேற்பார்வையாளர் தான் அவதானித்த அமிசங்கள் பரிமாறிக் பற்றிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top