ஒப்பீட்டுக் கல்வி மற்றும் கல்வியில் சமகாலப் பிரச்சினைகள் என்னும் கற்கை நெறியின் முதலாம் அமரவு இப்பாடம் தொடர்பாக அறிமுகம் செய்வதற்கு ஒதுக்கப்படுகின்றது. மாணவர்கள் என்ற வகையில் குறிப்பிட்ட ஒரு பாடம் கல்வி பற்றிய அறிவை விரிவாக்குவதற்கு எவ்வாறு உதவும் என விளங்கிக் கொள்வதற்கு நீங்கள் உரித்துடையவர்கள் அத்துடன் ஆசிரியராக அல்ல. அதிபராக அல்லது ஆசிரிய பயிற்றுநராக கல்வி நிர்வாகியாகப் பணிபுரியுமிடத்து பெற்றுக்கொண்ட அறிவு எத்துணையளவிற்கு உங்களுக்கு உதவுமென அறிந்து கொள்ளும் உரிமையும் உங்களுக்குண்டும் இவ்வமரவில் ஒப்பீட்டுக்கல்வி துறையின் உள்ளடக்கம் நோக்கம் பிரச்சினைகள், பிணக்குகள் என்பன விருத்தியடைந்த விதம் பற்றிக் கலந்துரையாடுவதோடு நிக்கற்கை நெறியைக் எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும் ஆராயப்படும்.
இக்கற்கை நெறியின் அமைப்புப் பற்றிய விளக்கத்தினை இவ்வமர்வு உங்களுக்குத் தரும். அதாவது ஏன், எவ்வாறு இக்கற்கை நெறிக்கான தொனிப்பொருள்களை இளங்கண்டுள்ளோம் என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.
கல்வித் துறையானது கல்வி உளவியல் கல்விர் சமூகவியல் கல்வித் தத்துவவியல், மற்றும் கல்வித் தொழிலுட்பம் ஆகிய பல உப துறைகளைக் கொண்டுள்ளதென்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வுப தலையங்கங்கள் யாவும் ஒரு நாட்டின் கல்வி மீது செல்வாக்குச் செலுத்துகின்ற ஏனைய பிரதான் துறைகளோடு தொடர்புள்ளன. ஆனால் ஒப்பீட்டுக் கல்வியென்பது ஒப்பீட்டுச் சமயம், ஒப்பீட்டு இலக்கியம், ஒப்பீட்டு அரசியல் முதலான பாடங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஏனெனில், இவ்வாறான துறைகள், நாடுகள் பிரதேசங்கள். பொருளாதார அல்லது அரசியல் முறைமைகள் என்பவற்றோடு ஒப்பிடப்படக்கூடியன.
தற்போது ஒப்பீட்டுக் கல்வி என்ற பாடம் எவ்வாறு தோன்றி காலப்போக்கில் எவ்வாறு பரிணாம் வளர்ச்சி கண்டது என்பதைப் பரிசீலிப்போம்.
ஒப்பிட்டுக் கல்வி முறைமையானது முதன் முதலாக 1817 இல் அன்ரோயின் யூலியன் டி பரிஸ்
(Quoted in Holmes, 1985) என்பவரால் ஆராயப்பட்டது. இதனூடாக எல்லா நாடுகளிலும் நிலவும் கல்வி பற்றி பகுப்பாய்வு செய்யலாம் என இவர் எண்ணினார். இதன் நோக்கம் தேவைப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தேசிய முறைமைகளில் திருத்தங்களையும் மாற்றங்களையும் கொண்டுவருவதன் மூலம் அருளைப் பூரணத்துவம் ஆக்குவதாகும்.
எனினும், அவரது ஒப்பீட்டு ஆய்வு பற்றிய விரிவான ஒரு முறை பற்றி அதிகம் அறியப்படவில்லை. வரணற்று ரீதியாக ஒப்பீட்டுக் கல்வியின் ஆரம்பமானது ஒப்பீட்டு தன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. மாதாக வெளிநாடுகளில் இருக்கின்ற கல்வி பற்றிய விவரணமாகவும் தகவலாகவும் மட்டுமே இருந்தது.
ஆரம்ப ஆய்வுகள் வெளிநாட்டு கல்வி முறைமைகள் பற்றி பயன்மிகுந்த தகவல்களைக் கொண்டிகுந்தன. ஆனால் தேசிய முறைமைகளின் அபிவிருத்தி பற்றி இவ்வாய்வுகள் கூறவில்லை.
சந்லர் (Sadler, 1902) என்பவரே ஒப்பீட்டு ரீதியான ஓர் அணுகு முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆவார். அவர் அடிக்கடி கூறிய கூற்று வருமாறு
“வெளிநாட்டு கல்வி முறைமைகள் பற்றி ஆய்வு செய்யும் போது பாடசாலைக்கு உள்ளே I X இருக்கின்ற விடயங்களை விட வெளியே இருக்கும் விடயங்களே கவனத்திற் கொள்ளப்பட v 2 வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாடசாலைக்கு உள்ளேயிருக்கின்ற நிலைமைகள் பற்றி சரியாக வியாக்கியானம் செய்ய இது அவசியம். ஒரு தேசிய கல்வி முறைமையானது.இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்றாகும் இது கடந்த காலத்தின் மறக்கப்பட்ட பிரச்சினைகளாலும் இடையூறுகளினாலும் பெற்றுக்கொண்டதொன்றாகும். வெளிநாட்டில் கல்வி முறைமைகள் பற்றி சரியான கண்ணோட்டத்தில் ஆராய்வதனூடாக எமது சொந்த கல்வி முறைமை பற்றி ஆராய்வதற்கும் விளங்கிக்கொள்வதற்குமான ஆற்றலைப் பெறுகின்றோம்”
பிரஷ்ஷிய (Pசயஸ்) தேசத்து தத்துவ ஞானியாகிய சேர்ஜியஸ் நசன் (Sergius Husawn 1928 என்பவரே ஒப்பீட்டுக் கல்வி பற்றிய தந்துவ ரீதியான கருத்தை முதன் முதல் முன்வைத்தார் ஆவார். இவர் கல்விக் கொள்கை பற்றிய தெரிவு செய்யப்பட்ட சில பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்தார் கட்டாயக் கல்வி பாடசாலையும் அரசும், பாடசாலையும் திருச்சபையும் மற்றும் பாடசாலையும் பொருளாதார் வாழ்க்கையும். ஹன்ஸ் (Hims) என்பவர் 1920 இல் மேற்குறிப்பிட்டவற்றைவிட அரசும் குடும்பமும், தேசிய சிறுபாண்மையினர், பலகலலக்கழகங்களும் நிதியும் மற்றும் அரசியல் கல்வி போன்ற அம்சங்களையும் சேர்த்துக்கொண்டார்.
தேசிய கல்வி முறைமைகளை வரலாற்றுப் பிள்வணியோடு இணைத்துப் பார்ப்பதற்கு முதல் முதல் முயற்சி செய்தவர் Kandel (1937) என்பவராவார். வெவ்வேறு நாடுகளின் கல்வி முறைமைகளை ஒப்பீடு செய்வதற்குக் கையாளப்படக்கூடிய முறைகள் பற்றி இவர் விசேடமாக தனது அவதானத்தைச் செலுத்தினார். அவ்வாறான ஒரு முறையே “புள்ளிவிபர ரீதியானது கல்விக்கான மொத்த நேரிய எதிர்பார்ப்புகள் செலவினம், பாடசாலைக் கட்டிடங்களுடைய அளவும் தன்மையும், கல்வி முறைமைகளின் வெவ்வேறு அம்சங்களுக்கான செலவினங்கள், மாணவர்களைச் சேர்த்தல், சராசரி வரவு, வெவ்வேறு மட்டங்களில் மாணவர்களைத் தொடர்ந்தும் வைத்திருத்தல் போன்றவை ஒப்பீடு செய்யப்படலாம். கல்வியையும் தேசிய நலனையும் ஒப்பீடு செய்வது மற்றொரு முறையாகும். இவ்வாறு ஒப்பிடுகையில் படிப்பறிவின்மைப் புள்ளி விபரங்கள், வர்த்தகம் மற்றும் வியாபாரத்தின் அளவு, தலா வருமாளம் மற்றும் குற்றச்செயல்களின் அளவு வறுமை போன்றவற்றை எடுத்துக்காட்டுவதனூடாக முன்னேற்றத்தை அளவிடலாம். வெவ்வேறு நாடுகளிலுள்ள கல்வியின் தரத்தை ஒப்பீடு செய்வது மற்றுமொரு முறையாகும். கண்டோல் தமத ஆய்வில் தேசியத்துக்கும் தேசியப் பண்புக்கும் கூடிய முக்கியத்துவம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக கண்டோய் 1936 இல் “கல்வி முறைமைகளில் வேறுபாடுகளை ஏற்படுத்தும் காரணிகளை கண்டுபிடித்தலே ஒப்பீட்டுக் கல்வியின் நோக்கமாகும்” எனக்கூறினார்.
Mms (1933, 1935) என்பவரும் வரலாற்று அணுகு முறையையே வலியுறுத்தினார். ஒவ்வொரு நாட்டின் கல்வி பற்றி கலாசார மற்றும் தேசியப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தார். தேசிய கல்வி முறைமைகளானவை தேசிய பண்பை வெளிப்படுத்துமென அவர் வாதிக்கின்றார். ஒரு நாட்டின் தேசியமானது மற்றொரு நாட்டுடன் இன, மொழி, சமய, ஒழுக்க, வரலணற்று புவியியல் அடிப்படையில் வேறுபடலாம். கல்வியின் தேசிய முறைமைகளானவை இக்காரணிகணளே செல்வாக்குக்கு உட்படுகின்றன. இவ்வம்சங்களின் அடிப்படையிலேதான் கல்வி முறைமைகள் வேருன்றியுள்ளான நவீன காலத்து நாடுகள் சமய மற்றும் சமூக, அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே கடந்த காலத்தில் இருந்தவற்றை சீர்திருத்தி கல்வியினூடாக ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றன.
ஒப்பீட்டும் கல்வி எண்ணக்கருவில் 1945 இலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஜோர்ஜ் பெரடே (George Bereiday) ஒப்பிட்டுக் ஆய்வின் மாதிரியாக (Model) உய்த்தறி விஞ்ஞான முைைய முன்வைத்தார். அவரது கருத்துப்படி ஒப்பீட்டுக் கல்வியியலாளர்கள் எதையும் புறயைமாக நோக்கவேண்டுமென்றும் நன்கு அவதானிக்கப்பட்ட விடயங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்றும் குறிப்பிடுகிறார். ஒரு நாட்டின் மொழியைத் தெரிந்திருப்பதோடு அந்நாட்டிற்கு ஒப்பீட்டு ஆய்வாளர் விஜயம் செய்யவேண்டுமென்றும் பெரடே குறிப்பிடுகின்றார்; தரவுகள் பின்னர் இணைக்கப்படம் வேண்டும். அதாவது அவரது கருத்துப்படி வரலாற்று, பொருளாதார, உளவியல், அரசியல், சமூகவியல் காரணிகள் கல்வி நடவடிக்கைகளில் படுத்திய தாக்கங்கள் பற்றி அறிந்துகொள்வதனுடாக கல்வி பற்றி ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட எண்ணக்கரு உருவாக வாய்ப்பேற்படுகிறது. இதனாலேயே கரலட் நோவா (Harold Nonh) என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார். “ஒப்பிட்டு அபயவு என்பது முக்கியமாக முறைமைகளின் பெயர்களுக்கும் நாடுகள் பதிலாக வெண்ணக்கருக்களி (மாறிகள்) பெயர்களைக் குறிப்பிடுதல். (Noah & Ecksten, 1969) இதன் விளைவாக ஒப்பீட்டுக் கல்வியில் ‘பிரச்சினை விடுவித்தல் அ ைமுறை’ உருவாகியது
தற்கால கல்வி முறைமைகள் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கின்றன.
அதிகமான நாடுகளில் கட்டுத கால தேரியமானது பல நாடுகளில் பொதுவாகக் காணப்பட்ட
பாரம்பரியங்களினால் உருவாகியதென்னம் எனவே தான் சில் ஒத்த தன்மைகள் இருப்பதால்
எதிர்காலமும் அவற்றால் நிர்ணயிக்கப்படுகின்றய இதனால்தான், வெவ்வேறு நாடுகளிலுள்ள
நலனிப் பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று ஒத்தனவாக இருக்கின்றன. அதேவேளையில்
நிரவுகளுக்கான வழிமுறைகளும் ஒத்த தன்மையுடையனவாக இருக்கலாம்