1.0 ஆய்வுப் பிரேரணை அறிமுகம்
ஆய்வுப் பிரேரணை இக்கட்டுரையானது, ஆய்வு பிரேரணை பற்றி விளக்கும் நோக்கில் எழுதப்படுகிறது.இன்று, பெரும்பாலான உயர் கற்கைகள் ஆய்வு தொடர்பான தேர்ச்சிகளை மாணவர்களிடத்தில் விருத்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இதன் காரணமாக, ஆய்வு தொடர்பாக உயர் கல்வியை தொடரும் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். உயர்கல்வியை குறிப்பாக, முதுமாணி, தத்துவமாணி போன்ற பட்ட மேற் படிப்புகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது, தாம் மேற்கொள்ளப்ப் போகும் ஆய்வு தொடர்பாக பிரேரணையினை சமர்ப்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதன் போது அவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வு முன்மொழிவுகளே, அவர்களது உயர்கல்விக்கான வாய்ப்புக்களைத் தீர்மானிகின்றன என்றால் அது மிகையில்லை. மட்டுமன்றி, பல்வேறு உண்ணாட்டு, சர்வேதச ஆய்வு நிறுவனங்களும் கால முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகளை/ கருப்பொருட்களை மையமாக கொண்டு ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு ஆய்வாளர்களிடம் இருந்து ஆய்வுப் பிரேரணைகளை கோருவதும், அதனடிப்படையில், சிறந்த ஆய்வுப் பிரேரணைகளை தெரிவு செய்து அவற்றுக்கு நிதி உதவிகளையும் செய்து வருகின்றன. இதன்போதும், ஆய்வுப் பிரேரணைகளின் தரம், இத்தகைய நிதிகளை பெறுவதில் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே, சிறந்த ஆய்வுப் பிரேரணையினை எழுதுவது எப்படி என்பது பற்றி ஆய்வு மாணவர்கள் அல்லது ஆய்வில் ஈடுபடுவோர் அறிந்திருப்பது மிக முக்கியமாகும்.
பரீட்சை வினாத்தாள்களை பெற இந்த லிங்கை சொடுக்கவும் – பரீட்சை வினாத்தாள்கள்
2.0 ஆய்வுப் பிரேரணை என்றால் என்ன?
Research Proposal என்பதை ஆய்வுப் பிரேரணை அல்லது ஆய்வு முன்மொழிவு என்றுகூறலாம். சிலர் Recommendation (பரிந்துரை) என்பதற்கு முன்மொழிவு எனும் பதத்தை பயன்படுத்துகின்றனர். இது பிழையானதாகும். ஆய்வுப் பிரேரணை அல்லது ஆய்வு முன்மொழிவு எனின், நாம் மேற்கொள்ள உள்ள ஆய்வு தொடர்பாக தெளிவான விபரங்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்படும் ஓர் ஆவணம் ஆகும். இதன்மூலம், ஒருவர் மேற்கொள்ளவுள்ள (உத்தேச) ஆய்வு தொடர்பான முழுமையான ஆய்வுச் செயன்முறைகள் பற்றிய தெளிவான விபரங்களை வழங்குதல் வேண்டும். இதன் மூலம், ஆய்வுப் பிரேரணை அல்லது ஆய்வு முன்மொழிவினை வாசிக்கும் ஒருவர் (பரீட்சகர் அல்லது வாசகர்) குறித்த ஆய்வு தொடர்பாக நீங்கள் அவற்றை மேற்கொள்ள போகிறீர்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். அதாவது உத்தேச ஆய்வு தொடர்பாக, ஒருவர் தனது திட்டத்தினை இதன் மூலம் முன் வைக்க முடியும். ஆய்வு முன்மொழிவின் தரத்தினை அடிப்படையாகக் கொண்டே உங்கள் உயர் கல்விக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என்பதை மறத்தல் ஆகாது. பொதுவாக சிறந்த ஆய்வு முன்மொழிவு பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டதாக தயாரிக்கப்படல் வேண்டும்: உத்தேச ஆய்வு தொடர்பாக, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய விவரணம் (What you will do?/ What you intend to study): இதில் உங்கள் ஆய்வு தொடர்பான ஆய்வுப் பிரச்சினை, நோக்கம் குறிக்கோள்கள், ஆய்வு வினாக்கள் பற்றிய விளக்கம் தரப்படல் வேண்டும். உத்தேச ஆய்வினை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விளக்கம் (Why it should be done?): இதில் குறித்த ஆய்வினை மேற்கொள்வதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் தரப்படல் வேண்டும்.
குறித்த உத்தேச ஆய்வினை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள்? (How you will do it): இதில் குறித்த ஆய்வினை மேற்கொள்ள எத்தகைய ஆய்வு முறையியலினை பயன்படுத்த போகிறீர் என்ற விளக்கம் தரப்படல் வேண்டும். குறித்த உத்தேச ஆய்வினை மேற்கொள்வதால் நீங்கள் அடைய எதிர்பார்க்கும் பேறுகள்/விளைவுகள் யாவை? (What you expect will results). குறித்த ஆய்வினை மேற்கொள்ளவதன் மூலம் ஆய்வாளர் அடைந்து கொள்ள எத்ரிபார்க்கும் ஆய்வு தொடர்பான உத்தேச முடிவுகள்/பேறுகளை பற்றிய விளக்கம் தரப்படல் வேண்டும்.. குறித்த உத்தேச ஆய்வுக்கான கால அளவு (When you will complete the study). இதில் குறித்த உத்தேச ஆய்வினை மேற்கோள்ள உங்களுக்கு தேவையான கால அளவு காட்டப்படல் வேண்டும். ஆய்வு முன்மொழிவினை பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் தயாரிக்க வேண்டி இருக்கும்: முதுதத்துவமானி, முது விஞ்ஞானமானி, கலாநிதி போன்ற பட்ட பின் பயில்நெறிகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது (தற்காலிக ஆய்வு முன்மொழிவு). முதுதத்துவமானி, முது விஞ்ஞானமானி, கலாநிதி போன்ற பட்ட பின் பயில்நெறிகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆய்வாளர் தனது ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்காக குறித்த நிறுவன/பல்கலைக்கழக ஒழுக்கநெறி சபைகளில் அனுமதி கோரும் போது (விரிவான ஆய்வு முன்மொழிவு) கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைகுழு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய விஞ்ஞான மன்றம் போன்ற நிறுவனங்கள், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வு முன்மொழிவுகளை காலத்துக்கு காலம் வேண்டி விளம்பரம் செய்வர். இத்தகைய நிறுவனங்களின் நிதி உதவியுடன் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி ஆய்வு முன்மொழிவுகளை தனியாகவோ, குழுவாகவோ தயாரிக்க முடியும். ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நிதி உதவிகளை பெரும் நோக்கில் நிதி உதவி செய்யும் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆய்வு முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டி இருக்கும்.
ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய அடிப்படைக் கூறுகள்
ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் உள்ளன. அவை வருமாறு:
ஆய்வுத் தலைப்பு
ஆய்வுச் சுருக்கம்
அறிமுகம்
ஆய்வுப் பிரச்சினை கூற்று அல்லது ஆய்வு பிரச்சினை
ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி
ஆய்வின்
பிரதான
நோக்கம், ஆய்வுக்
வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள்
ஆய்வு முக்கியத்துவம்
ஆய்வு
இலக்கிய மீளாய்வு
ஆய்வு முறையியல்
வரையறைகளும் எல்லைப்டுத்தலும்
காலச் சட்டகம்
பாதிடு
நூற்விபரப் பட்டியல்
பின்னிணைப்புக்கள்
முன்மொழிவில்
உள்ளடக்கப்பட
குறிக்கோள்கள்,
ஆய்வு வேண்டிய முக்கிய கூறுகளாக மேற்கூறப்பட்டவை காணப்பட்டாலும், இவை சிலவேளைகளில் உயர்கல்வி நிறுவனத்துக்கு (பல்கலைக்கழகம்) நிறுவனம் வேறுபட்டு அமையும் என்பதை கவனத்திற் கொள்க.
ஆய்வு முன்மொழிவினை தயாரிக்க முன்னர், ஆய்வு முன்மொழிவினை அனுப்பவுள்ள உயர் கல்வி நிறுவனம் ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் பற்றிய வழிகாட்டல்கள் எதையாவது தந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம். அத்தகைய வழிகாட்டல்கள் தரப்பட்டு இருக்குமாயின், குறித்த வழிகாட்டலுக்கு அமைய ஆய்வு முன்மொழிவினை எழுதுதல் வேண்டும். குறித்த வழிகாட்டலுக்கு மாற்றமாக அனுப்படும் ஆய்வு முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உங்களுக்கு தேவையான அனைத்து விதமான கல்விசார் விடயங்களை எம்மிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.தொடர்ந்து tamilexam உடன் இணைந்து இருக்கவும்